சாக்லெட் தொழிற்சாலை, 'அவதார்' பாணி உலகம்

சாக்லெட் தொழிற்சாலை, 'அவதார்' பாணி உலகம்

2 mins read
a5b03bbd-d00e-4df0-b088-df275220ac5c
(இடம்) சிங்கப்பூரில் அவதார் பாணி உலகம்.(மேல்) டெம்சியில் இனிப்பூட்டும் சாக்லெட் அனுபவம்.கோ-கார்ட்ஸ் பந்தயத் திடல். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஷங்ரிலா குழுமம், சிட்டிநியான் -
multi-img1 of 3

சிங்கப்பூரின் புதிய கவர்ச்சித் தளங்கள்

சிங்­கப்­பூ­ரில் ஒரு குட்டி உல­கமே அடங்­கி­யுள்­ளது. உல­கின் பல்­வேறு இடங்­களில் உள்ள கவர்ச்­சித் தளங்­கள் சிங்­கப்­பூ­ரில் அமைந்­துள்­ளன.

யூனி­வர்­சல் ஸ்டூ­டியோ, எஸ்.இ.ஏ. மாபெ­ரும் கடல்­வாழ் உயி­ரின அருங்­காட்­சி­ய­கம், லாஸ் வேகாஸ் நக­ரில் இருப்­பது போன்ற மெரினா பே சேண்ட்ஸ் மற்­றும் ஜெண்­டிங் சிங்­கப்­பூர் சூதாட்­டக் கூடங்­கள் போன்­றவை அவற்­றில் சில. இந்த நிலை­யில் சிங்­கப்­பூ­ரின் சுற்­றுலா துறையை மேலும் மேம்­ப­டுத்­தும் வகை­யில் புதிய கவர்ச்­சித் தளங்­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அந்த வகை­யில் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­களில் உள்ள 'கிள­வுட் ஃபாரஸ்ட்' கண்ணாடி காட்­சி­ய­கம், இவ்­வாண்டு இறு­தி­யில் 'அவ­தார்' திரைப்­ப­டத்­தில் வரு­வது போன்ற 'பண்­டோரா' உலகமாக உரு­மா­று­கிறது. சிட்­டி­நி­யான் ஹோல்­டிங்ஸ், பிர­பல பாலி­வுட் திரைப்­பட இயக்­கு­நர் ஜேம்ஸ் கேம­ரன், ஜோன் லாண்­டாவ்'ஸ் லைட்ஸ்­டோர்ம் எண்­டர்­டெய்ன்­மெண்ட் கூட்­டுத் தயா­ரிப் ­பில் இது உரு­வாக்­கப்­ப­டு­கிறது.

'கிள­வுட் ஃபாரஸ்ட்'டில் உள்ள மெய்­சி­லிர்க்க வைக்­கும் நீர்­வீழ்ச்சி, சுழ­லும் நடை­பா­தை­கள், பசு­மை­யான, குளு­மை­யான சூழல் ஆகி­யவை 'அவ­தார்' பாணி அனு­ப­வத்­திற்கு ஏற்ற இடம் என்று சிட்­டி­ நி­யான்ஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி ரோன் டான் தெரி­வித்­துள்­ளார்.

பண்­டோரா உல­கில் உள்ள விசித்­திர உயி­ரி­னங்­கள், நீல­நிற ஒளி­ரும் சுற்­றுச்­சூ­ழல் போன்­றவை புதிய உயி­ரோட்­ட­மான உல­கத்­தில் நுழை­வது போன்ற அனு­ப­வத்­தைத் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்­வாண்டு இறு­தி­யில் உல­கம் முழு­வ­தும் திரை­யி­டப்­ப­ட­வி­ருக்­கும் 'அவ­தார் 2' திரைப்­ப­டத்­தின் தொடர்ச்­சி­யாக புதிய பண்­டோரா உல­கின் அனு­ப­வம் சிங்­கப்­பூ­ரில் கிடைக்­க­வி­ருக்­கிறது.

மற்­றொரு கவர்ச்­சித் தள­மாக டெம்­சி­யில் புதிய சாக்­லெட் தொழிற்­சாலை அமைக்­கப்­ப­டு­கிறது. இவ்­வாண்­டின் நான்­காம் காலாண்­டில் தயா­ரா­க­வி­ருக்­கும் தொழிற்­சா­லை­யில் பய­ணி­கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான வடி­வத்­தில் சாக்­லெட் தயா­ரித்து மகி­ழ­லாம்.

உள்­ளூர் நிறு­வ­ன­மான 'மிஸ்­டர் பக்­கெட்' இந்­தத் தொழிற்­சா­லை­யில் இனிப்­பூட்­டும் பல அனு­ப­வங்­க­ளை­யும் வழங்­க­வி­ருக்­கிறது.

செந்­தோ­சா ­தீவு மேம்­பாட்டு கூட்டு நிறு­வ­ன­மும் பால­வன் இன்­னோ­வே­ஷன் ஸ்டூ­டி­யோ­வும் இணைந்து செந்­தோசா தீவில் புதிய கேளிக்கை நிகழ்ச்­சிக்கு திட்­ட­மிட்டு வரு­கின்­றன. அதா­வது கோ-கார்ட்ஸ் கார் பந்­தய திடலை அவை உரு­வாக்கி வரு­கின்­றன. 'ஹைப்­பர்­ டிரைவ்' என அதற்­குப் பெயர் வைக்கப்­பட்­டுள்­ளது.

இந்த இடம் தயா­ரா­கி­விட்­டால் உள்­ளூ­ரி­லேயே காரை ஓட்டி பந்­த­யத்­தில் ஈடு­ப­ட­லாம். உற்­சா­க­ம­ளிக்­கும் இந்த கோ-கார்ட்ஸ் திட­லில் மூன்று அடுக்கு பந்­த­யப் பாதை­கள் அமைக்­கப்­ப­டுகின்றன.