பட்டிமன்றத்தில் தீர்ப்பு; தமிழ்மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உண்டு

தமிழ்­மொ­ழிக் கற்­ற­லில் வாழ்­வா­தா­ரம் உள்­ளது என்ற நம்­பிக்கை மாண­வர்­க­ளுக்கு இருக்­கி­றதா? இல்­லையா? என்ற தலைப்­பில் நடை­பெற்ற பட்­டி­மன்ற நிகழ்ச்­சி­யில் வாழ்­வா­தா­ரம் உண்டு எனத் தீர்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மொழி விழா­வை­யொட்டி தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழகத்­ தின் 115வது பட்­டி­மன்­றம் இம்­மா­தம் 16ஆம் தேதி சனிக்­கி­ழமை மாலை கியட்­ஹாங் சமூ­க­மன்­றத்­தின் பன்­னோக்கு மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.

தமிழ்­மொ­ழிக் கற்­ற­லில் வாழ்­வா­தா­ரம் உள்­ளது என்ற நம்­பிக்கை மாண­வர்­க­ளுக்கு இருக்­கி­றதா? இல்­லையா? என்ற தலைப்­பில் நடை­பெற்ற பட்­டி­மன்­றத்­தில் 'இருக்­கிறது' என்ற அணி­யில் கோபிகா, மகிஷா, ரோகித் குமார் ஆகி­யோ­ரும், 'இல்லை' என்ற அணி­யில் விஷ்­ணு ­வர்­தினி, கவின் நிலா, இனியா ஆகி­யோ­ரும் வாதிட்­ட­னர்.

இருக்­கிறது என்ற அணி­யின் முத­லாம் பேச்­சா­ளர் ரோகித் குமார் பேசு­கை­யில், ஆசி­ரி­யர்­கள், மொழி­பெ­யர்ப்­பா­ளர்­கள், பாட­லா­சிரியர்கள், திரைக்­கதை எழு­து­ப­வர்­கள், பேச்­சா­ளர்­கள் மற்­றும் கணி­னித்­து­றை­யில் மென்­பொ­ருள் உரு­வாக்­கு­ பவர்­க­ளாக, பொறி­யா­ளர்­க­ளாக நிறைய வேலை­வாய்ப்­பைப் பெறு­கி­றார்­கள் என்­றார்.

இரண்­டாம் பேச்­சா­ளர் மகிஷா தாய்­மொழி கற்­ப­வர்­க­ளின் அறி­வாற்­றல் மற்ற மொழி­க­ளைக் கற்­ப­வர்­க­ளின் அறி­வாற்­ற­லை­விட 40% அதி­க­மாக இருக்­கிறது என்­றும் தமிழ் நம் அடை­யா­ளம் என்­றும் அதை உணர்ந்­த­வர்­கள் எந்­தத் துறை­யி­லும் முன்­னேற முடி­யும் என்­றும், என் தாய் பெயர் தெரி­யாது என் தந்தை பெயர் தெரி­யாது என்­ப­தை­விட மிகப்பெரிய அவ­மா­னம் என் தாய்­மொழி தெரி­யாது என்­ப­தா­கும் என்­றும் பேசி­னார்.

3வது­ பேச்சாளரான அணித் ­த­லைவி கோபிகா பேசும்­போது தாய்­மொ­ழிக்­காக அர­சாங்­கம் ஏரா­ள­மான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தந்­தி­ருப்­ப­தா­க­வும், நிறைய வேலை வாய்ப்­பு­கள் அவர்­க­ளுக்­காக தயா­ராக இருப்­ப­தா­க­வும் சொன்­னார்.

மேலும் மின்­னி­யல் பொம்­ம­லாட்­டம், வலை­யொ­லி­யில் கிரா­மத்து சமை­யல் போன்று தமிழ்­மொ­ழி­யில் ஆர்­வம் இருப்­ப­வர்­கள் வாய்ப்பு களைக் கண்­டு­பி­டித்து வாழ்­வா­தா­ரங்­க­ளைத் தேடிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­றும் குறிப்­பிட்­டார்.

இல்லை என்று பேசிய அணி­யின் முதல் பேச்­சா­ளர் இனியா செந்­தில்குமார் தமி­ழில் பேசும்­போது பெரிய ஔவை­யார் மாதிரி பேசாதே என்று கிண்­டல் செய்­வ­தா­க­வும், தமிழ் என்ற விதையை ஊன்றி, நற்­ற­மிழை வளர்க்க மாண­வர்­கள் ஆசைப்பட்­டா­லும் ஆங்­கி­லத்தை சிறப்­பா­கப் படி என்றே பெரும்­பா­லான பெற்றோர் பிள்­ளை­களை கட்­டா­யப்­ப­டுத்துகின்­ற­னர் என்றும் வாதிட்­டார். 2வது பேச்­சா­ளர் கவின்­நிலா, வேலை வாய்ப்­பு­களும் குறைவு, ஊதி­ய­மும் குறைவு என்­பது எல்­லா­ருக்­குமே தெரி­யும் என்று வாதிட்­டார்.

மூன்­றாம் பேச்­சா­ள­ரான அணித்­த­லைவி விஷ்ணுவர்தினி, தமிழை மாண­வர்­கள் தம் மதிப்­பு­மிக்க அடை­யா­ள­மா­கப் பார்க்­க­வில்லை என்­றும் பேச்­சா­ளர்­கள் மேடை­யில் பேசும் போது தமி­ழன்­னையே நீதான் என் பேச்சே நீ இல்­லாட்டி போனது என் மூச்சே என்று வீர­மு­ழக்­க­மிட்டு, மேடை­யை­விட்டு இறங்­கி­ய­தும் மாறி விடு­கி­றார்­கள் என்­றும் பேசி­னார்.

முகம்­மது அலி தமது தீர்ப்­பில் "வாழ்­வா­தா­ரம் என்­பது ஒரு­வ­ரின் ஈடு­பாட்­டால் வரு­வது என்று குறிப்­பிட்­டார். நீங்­கள் எவ்­வ­ள­வுக் கெவ்­வ­ளவு ஈடு­பாட்­டு­டன் தமிழை நேசிக்­கி­றீர்­களோ அந்த அள­வுக்கு வாழ்­வா­தா­ரம் நிச்­ச­ய­மாக உள்­ளது," என்று கூறி­னார்.

இந்த நிகழ்ச்சியில் அடித்தளத் தலைவர்களின் ஆலோசகர், சுவா சூ காங் குழுத் தொகுதி (கியட்ஹாங்) நாடாளுமன்ற உறுப் பினர் திரு சுல்கர்னைன் அப்துல் ரஹீம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவரும் கியட்ஹாங் இந்திய நற்பணிச் செயற்குழுவின் தலைவருமான அருமைச்சந்திரன் வரவேற்புரை, செல்வநாதன் நன்றியுரை ஆற்றினர். (தகவல்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!