முத்தான முத்தமிழ் விழா 'அத்தனையும் கற்கண்டு'

முத்தான முத்தமிழ் விழா 'அத்தனையும் கற்கண்டு'

1 mins read
1c647f30-a8b8-4e02-9736-29354346cb50
அருள் ஓஸ்­வின் 'தமி­ழும் இளை­ய­ரும்' என்ற தலைப்­பி­லும் தமிழ் இலக்­கிய மன்றத் தலைவி செல்வி மிரு­துளா குமார் 'தமி­ழும் தொழில்­நுட்­ப­மும்' என்ற தலைப்­பிலும் சிற்­று­ரை­யாற்­று­கின்­ற­னர். படங்கள்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் -
multi-img1 of 2

தமிழ் மொழி விழா­வை­யொட்டி இவ்­வாண்­டும் முத்­த­மிழ் விழாவை மிகச் சிறப்­பாக நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் செய்­துள்­ளது.

வரும் 23ஆம் தேதி சனிக் கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்­கு­கிறது.

ஏ.கே.டி. கிரி­யே­ஷன்­சின் கிரா­மிய நட­னம், மாண­வர்­க­ளின் மாறு­வே­டப் போட்டி, கதை சொல்­லும் திறன், பேச்­சுத் திறன், உள்­ளூர் எழுத்­தா­ள­ருக்­குத் தமி­ழ­வேள் விருது, போட்­டி­க­ளின் வெற்­றி­யா­ளர் அறி­விப்பு, உள்­நாட்டு இளை­யர்­க­ளின் சிறப்­புச் சிற்­று­ரை­கள் ஆகிய அனைத்­தும் உள்­ள­டக்­கிய முத்­த­மிழ் விழா அத்­த­னை­யும் கற்­கண்டு என்று சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை கலந்­து­கொள்­கி­றார்.

இணை­யப் பாது­காப்­புப் பொறி­யா­ள­ரான அருள் ஓஸ்­வின் 'தமி­ழும் இளை­ய­ரும்' என்ற தலைப்­பி­லும் தமிழ் இலக்­கிய மன்றத் தலைவி செல்வி மிரு­துளா குமார் 'தமி­ழும் தொழில்­நுட்­ப­மும்' என்ற தலைப்­பிலும் சிற்­று­ரை­யாற்­று­கின்­ற­னர். சூம் அடை­யாள எண்: 826 5010 8119, கட­வுச் சொல் : astw

யூடி­யூப் நேரலை:

https://www.youtube.com/c/

singaporetamilwriters