கடை ஏழு வள்ளல்களின் கொடையுள்ளம்; ஆடல், பாடல்

கடை ஏழு வள்ளல்களின் கொடையுள்ளம்; ஆடல், பாடல்

2 mins read

தமிழ் மொழி விழாவையொட்டி கலா­மஞ்­சரி தமி­ழிசை பரப்பு மன்றம் 'கடை ஏழு வள்­ளல்­கள்' பற்­றிய ஆடல் பாடல் நிகழ்ச்­சியை வரும் 22ஆம் தேதி, வெள்­ளிக்­கி­ழமை, கேலாங் ஈஸ்ட் பொது நூல­கத்­தில் மாலை 6.15 மணி­யி­லி­ருந்து 7.45 மணி வரை படைக்க இருக்­கிறது.

செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாயர் இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொள்­கி­றார்.

தமிழ் இலக்­கி­யங்­களில் ஒரு மனி­தன் சிறப்­பான வாழ்க்கை வாழ்­வ­தற்­கான அனைத்து கூறு­களும் எடுத்­து­ரைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

பேகன், பாரி, காரி, ஓரி, அதி­ய­மான், ஆய், நல்லி ஆகி­யோர் கடை­யேழு வள்­ளல்­கள் எனப் போற்­றப்­ப­டு­கின்­ற­னர். இம்­மன்­னர்­கள் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகுதி களை அந்த காலத்­தில் ஆண்­ட­வர்­கள்.

தங்­க­ளின் கொடை­வள்­ளல் மூலம் மக்­க­ளின் மன­தைக் கவர்ந்­த­னர். மக்­க­ளின் மனம் அறிந்து, அவர்­கள் தேவையை உணர்ந்து வாரி வழங்கி நல்­லாட்சி புரிந்த மன்­னர்­கள் ஆவர்.

குளி­ரில் நடுங்­கும் மயி­லுக்குப் போர்வை வழங்­கி­னார் பேகன்; முல்­லைக்­கொடி வாடி நிற்­பதைக் கண்டு தன் தேரையே வழங்­கி­னார் பாரி; நீண்ட நாள் வாழ வைக்­கக்கூடிய நெல்­லிக் கனியை தான் உண்­ணா­மல் ஔவை­யா­ருக்கு கொடுத்து மகிழ்ந்­தார் அதி­ய­மான்.

இப்­படி அவர்­கள் ஆற்­றிய செயல்­கள் பெருந்­தன்­மை­யை­யும் அவர்­க­ளு­டைய இயற்கை குணத்­தை­யும் போற்­று­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன.

ஆக இந்த நல்ல செயல்­களை இளை­ஞர்­கள் புரிந்துகொள்ள வேண்­டும் என்ற நோக்­கில் இந்­நி­கழ்ச்­சியைப் படைக்க இருப்­ பதாக திரு­மதி. சௌந்­த­ர­நா­யகி வயி­ர­வன் தெரி­வித்­தார்.

சென்­னை­யைச் சேர்ந்த கலை­மணி வி. சங்­கர், இந்­நி­கழ்ச்­சிக்கு பாடல்­கள் எழுதி இசை­ய­மைத்து இருக்­கி­றார்.

கலா­மஞ்­ச­ரி­யின் நிறு­வ­னர் திரு­மதி. சௌந்­தர நாயகி வயி­ர­வன் மற்­றும் கலா­மஞ்­ச­ரி­யின் ஆசி­ரியை திரு­மதி உமா பிர­காஷ் ஆகிய இரு­வ­ரும் இதில் பாடல்­களைப் பாட இருக்­கின்­ற­னர்.

எஸ். தேவ­ரா­ஜன், மிரு­தங்­கம் இசைக்க, திரு வெ. சிவ­கு­மார் இதற்கு வய­லின் வாசிக்க இருக்­கி­றார்.

திரு­மதி மோகன பிரியா இந்­நி­கழ்ச்­சியை வழி நடத்­து­கி­றார். திரு­மதி ஸ்வர்­ண­வர்ஷா குரு­மூர்த்தி தமது மாண­வர்­க­ளு­டன் நடன நிகழ்ச்­சியை படைக்­கி­றார். நட்­சத்­தி­ரம் பிரேம்­கு­மார் ஒளிப்­ப­திவை ஏற்று­உள்­ளார்.

இயல், இசை நாட்­டி­யம் வாயி­லாக எளிய தமி­ழில், அரிய செயல்­கள் செய்த மன்­னர்­க­ளைப் பற்றி எடுத்­துக்­கூ­றும் நிகழ்ச்­சி­யாக இது அமை­யும் என விழா குழு­வி­னர் கூறி­யுள்­ள­னர்.