'மீண்டு வருவோம் மீண்டும் வருவோம்'

'மீண்டு வருவோம் மீண்டும் வருவோம்'

1 mins read

'மீண்டு வரு­வோம், மீண்­டும் வரு­வோம்' எனும் தலைப்­பில் சிங்­கப்­பூர் மாதவி இலக்­கிய மன்­றத்­தின் 42வது தமி­ழர் திரு­நாள் மற்­றும் 100வது இலக்­கி­யச்­சோலை வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு பாலஸ்டி­யர் சாலை­யில் உள்ள சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்­கில் நடை­பெ­று­கிறது.

கவி­ஞர்­கள் பங்­கேற்­கும் கவி­ய­ரங்­கம், உரை­ய­ரங்­கம், சிறப்­புரை, மாணவ-மாண­வி­ய­ரின் கலை நிகழ்ச்­சி­கள், முனை­வர் இரத்­தின வெங்­க­டே­ச­னின் நூல் ஆய்வு, கவி­ஞர் தியாக.இர­மேஷ்­ஷின் "தனி­மைத் தவம் " எனும் கவிதை நூல் வெளி­யீடு என சிந்­தைக்­கும் செவிக்­கும் விருந்­த­ளிக்­கும் பல்­சுவை அங்­கங்­கள் நடை­பெற உள்­ளன. முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹோ கா லியோங், 'ஜே ஜி எண்­டர்­பி­ரை­சஸ்' நிர்­வாக இயக்­கு­நர் டாக்­டர் தின­க­ரன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆர். ரவீந்­தி­ரன் ஆகி­யோர் இதில் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்கேற்கின்றனர்.