இன்று வெள்ளிக்கிழமை:
1. என்.பி.எஸ் 'இமயம்' தமிழ் மொழி விழா:
ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவரும் என்.பி.எஸ் அனைத்துலகப் பள்ளியின் 'இமயம்' இவ்வாண்டும் மீண்டும் யூடியூப் தளத்தில் நடைபெறவுள்ளது. உற்சாகமூட்டும் நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மொழித்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இவ்விழா இளையர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. NPS International School யூடியூப் தளத்தில் வெள்ளி மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.
2. கலாமஞ்சரி - கடையேழு வள்ளல்கள்:
பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகிய கடையேழு வள்ளல்கள் பற்றிய ஆடல், பாடல் நிகழ்ச்சி. இலக்கியம் மக்களுக்குக் கற்றுத்தரும் பல்வேறு ஒழுக்கங்களையும் பாடங் களையும் ஆடல், பாடல் வாயிலாகவும் இளையர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிதான் கலா மஞ்சரியின் 'கடையேழு வள்ளல்கள்'. கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியை இணையத்தின் வழியாக (http://kalamanjari.sg/index.php) காணலாம். நேரம்: இரவு 7 மணி.
நாளை சனிக்கிழமை:
1. ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக்கல்லூரி-அக்னி 2022
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரடியாக நடத்தப்படும் கலை நிகழ்ச்சியான அக்னி, இவ்வாண்டு 'ஸூம்' தளத்தில் நடைபெறும். மாணவர்களின் சொந்த முயற்சியையும் கலைத் திறனையும் கொண்டாடும் இந்நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்கும். சூம் அடையாள எண்: 833 5942 6144, கடவுச் சொல்: 767866
2. சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் கழகம் - சுழலும் சொற்போர்
சமூக, பொருளியல், அரசியல் சம்பந்தப்பட்ட ஏராளமான விவாதங்களை பள்ளிகளிலும் தொலைக்காட்சியிலும் தமிழர்கள் கண்டிருப்பர். வரும் சனிக்கிழமையன்று சற்று மாறுபட்ட விதத்தில் தமிழ் இலக்கியத்தை ஆராயும் வகையில் 'சுழலும் சொற்போர்' எனும் விவாதம் கலந்த பேச்சு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் பகல் 12.30 வரை 'ஸூம்' தளத்தில் நடக்கிறது.சூம் அடையாள எண்: 494 237 4135, கடவுச் சொல்: stik23
3. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் - முத்தமிழ் விழா
தமிழில் பேசி பழகவும் மொழித்திறனை வளர்த்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமூட்டவும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 'முத்தமிழ் விழா' எனும் போட்டிகள் நிறைந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி நாளை சனிக்கிழமையன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. ஏ.கே.டி. கிரியேஷன்சின் கிராமிய நடனம், மாணவர்களின் மாறுவேடப் போட்டி, கதை சொல்லும் திறன், பேச்சுத் திறன், உள்ளூர் எழுத்தாளருக்குத் தமிழவேள் விருது, இளையர்களின் சிறப்புச் சிற்றுரைகள் ஆகிய அனைத்தும் உள்ளடக்கியது. அருள் ஓஸ்வின் 'தமிழும் இளையரும்' என்ற தலைப்பிலும் தமிழ் இலக்கிய மன்றத் தலைவி செல்வி மிருதுளா குமார் 'தமிழும் தொழில்நுட்பமும்' என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றுகின்றனர். சூம் அடையாள எண்: 826 5010 8119, கடவுச் சொல்: astw, யூடியூப் நேரலை: https://www.youtube.com/c/singaporetamilwriters
(தொகுப்பு: மாதங்கி இளங்கோவன்)

