தமிழ் மொழி விழா நிகழ்வுகள்

இன்று சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:

ஆண்டர்சன் - சிராங்கூன் தொடக்கக்கல்லூரி - அக்னி 2022

மாணவர்களின் சொந்த முயற்சியையும் கலைத்திறனையும் கொண்டாடும் இந்நிகழ்ச்சி இன்று சனிக்கிழமையன்று காலை 9.30 மணி முதல் 11 மணி வரை.

ஸூம் சந்திப்பு எண்: 833 5942 6144, கடவுச் சொல்: 767866

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் கழகம் - சுழலும் சொற்போர்

தமிழ் இலக்கியத்தை ஆராயும் 'சுழலும் சொற்போர்' விவாதம் கலந்த பேச்சு சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பகல் 12.30 வரை.

ஸூம் சந்திப்பு எண்: 494 237 4135, கடவுச்சொல்: stik23

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் - முத்தமிழ் விழா:

தமிழில் பேசிப் பழகவும் மொழித்திறனை வளர்த்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமூட்டவும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் 'முத்தமிழ் விழா' என்னும் போட்டிகள் நிறைந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இன்று மாலை 6 மணி - 8 மணி வரை. ஸூம் சந்திப்பு எண்: 826 5010 8119 - கடவுச்சொல்: astw

யூடியூப் நேரலை: https://youtube.com/c/singaporetamilwriters

நாளை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள்:

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின்-

'சமுதாய மாற்றத்தில் இளையரின் புத்தாக்கப் பணி'

இந்த மாநாடு ஞாயிறு காலை 9.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஸூம் தளத்தில் நடைபெறும்.

ஸூம் சந்திப்பு எண்: 513 426 7739, கடவுச் சொல்:STYCTLF22

அனைத்துலகத் தமிழ்ப் பேச்சு, அரங்கப் பேச்சு போட்டிகள்:

இந்த நிகழ்ச்சி ஞாயிறு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஸூம் தளத்தில் நடக்கவுள்ளது. ஏற்பாடு: '14 டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்' ஆலோசகர், ஹரிகிருஷ்ணன் முத்துசுவாமி. ஸூம் சந்திப்பு

எண்: 841 4149 3235, கடவுச் சொல்: 912017

யுத்த காண்டம் என்பது மின்னிலக்க 'அமேசிங் ரேஸ்'

பாணியில் நடத்தப்படும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி.

ஏற்பாடு: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம். இப்போட்டியில் இருவர் கொண்ட குழுக்கள் பங்கெடுத்து தமிழ் புதிர்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஞாயிறு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஸூம் தளத்தில் இப்புதிர் போட்டி நடைபெறும். ஸூம் சந்திப்பு எண்: 419 133 5145,

கடவுச் சொல்: TLF2022

கணியன் 2.0 - தமிழ் மென்பொருள் அறிமுகம்:

தேசிய நூலகக் கட்டடத்தின் The Pod-இல் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். ஏற்பாடு: உத்தமம். மொத்தம் 25 எழுத்துரு (Fonts), 250 உள்ளூர் சின்னங்களும் வடிவமைப்புகளும் மாணவர்களுக்கும் சமூகத்தினருக்கும் அறிமுகம் செய்யப்படும்.

கலைச்செல்வங்கள் 2022: தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி மாலை 4 மணி - 5.30 மணி வரை ஃபேஸ்புக் தளத்தில் நடைபெறும். நான்கு விதமான போட்டிகளில் பங்கெடுக்க மாணவர்களை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சி, தமிழ் மொழியின் தொன்மையை புரியவைக்க முயற்சி செய்கிறது. Facebook@Thomson CC

மகிழ்ச்சி - சக்தி நுண்கலைக் கூடம்: தமிழ் இலக்கியத்தின் மூலம் தமிழ் கலாசார சிறப்புகளையும் அவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் எடுத்துரைக்கும் இந்தப் பயிலரங்கு

மாலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை.

Facebook and Instagram @Sakthifinearts

இயற்கையும் தமிழர் வாழ்வும்: சிங்கப்பூரின் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி எனும் தமிழர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள நெருக்கமான பந்தத்தை விளக்குகிறது.

ஸூம் சந்திப்பு எண்: 889 2227 9640, கடவுச் சொல்: 12345

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை:

தமிழ்ச் செயலி உருவாக்கம்: உயர்நிலைப் பள்ளி தமிழ் மொழி மாணவர்களுக்கான பயிலரங்கு/ ேபாட்டி. ஏற்பாடு: பார்ட்லி உயர்நிலைப் பள்ளி. ஸூம் தளத்தில் நடைபெறும். பதிவு செய்த மாணவர், ஆசிரியர்களுக்கு மட்டும். மாலை 4.00 - 6.00 மணி

ஏப்ரல் 30 சனிக்கிழமை:

கதை நேரம் 2.0: கிரியேட்டிவ் ஹாண்ட்ஸ் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

இடம்: The POD - தேசிய நூலகக் கட்டடம்.

(தொகுப்பு: மாதங்கி இளங்கோவன்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!