நமது உடல் வேண்டாத நோய், உடல்நலப் பிரச்சினைகள் அண்ட வந்தால் சில பாதிப்புகளை ஏற் படுத்தி எச்சரிக்கிறது. அந்தப் பாதிப்பு எதற்காக ஏற்பட்டது என் பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் நோய் அல்லது பிரச்சினை முற்றுவதற்கு முன்பே குணப்படுத்தவோ அல்லது கட்டுப் படுத்தவோ முடியும். சில நாட்பட்ட நோய்கள் தாக்குவதற்கு முன்னால் அறிகுறிகளை உணர்த்தி நம்மை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. அறிகுறிகளை உணர்ந்து உடனடி யாகப் பரிசோதனை செய்து சிகிச் சைகளை மேற்கொண்டால் அந்தப் பாதிப்புகளைத் தவிர்த்துவிடலாம்.
நீண்ட தூரம் உட்கார்ந்து கால்களை தொங்க போட்டபடி பயணம் மேற்கொள்ளும்போது காலில் வீக்கம் ஏற்படுவது. இதனை பயணத்தின் பாதிப்பால் ஏற்பட்டது என்று அலட்சியப்படுத்திவிட வேண் டாம். ஒருவேளை இதயத்தில் அல்லது சிறுநீரகத்தின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவரைச் சந்தித்து தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
காலையில் தூங்கி எழுந்ததும் சிலருடைய முகம் வீங்கிய நிலையில் காணப்படும். ஒரு சில நாட்கள் அவ்வாறு காணப்பட்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி அவ்வாறு வீங்கிக் காணப்பட்டால், சிறுநீரக நோய்ப் பாதிப்பை உணர்த்தும் அறிகுறியாக அதனை எடுத்துக்கொள்ளலாம்.
அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்பட்டால் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்த சோகையோ, தைராய்டு பாதிப்பின் வெளிப்பாடாக அது இருக்கக் கூடும்.
உணவுக்கட்டுப்பாடு, உடற் பயிற்சி போன்றவை மேற்கொள்ளாமல் திடீரென்று உடல் எடை குறைந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இனிப்பு நோய், புற்றுநோய், காசநோய் போன்ற பாதிப்புகள் உடல் எடையை இழக்கச் செய்யலாம்.
தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது தலைவலி ஏற்பட்டால் மருத்துவரைச் சந்தித்து ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
உடல் எடை குறைவது, அதிக தாகம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலில் ஏற்படும் புண்ஆறாமல் இருத்தல் போன்றவை ஏற்பட்டால் அவை இனிப்பு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி ஜீரணகோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக தோன்றுதல் போன்றவை இருந்தால் அவை ஈரல் வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
கால் பாதம் வெடித்துக் காணப் படுதல், இளநரை போன்றவை ஏற்பட்டால் உடலில் பித்தம் அதிகரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். கால் பெருவிரல் அல்லது கை பெருவிரல் முனைப் பகுதி சுருங்கி, வீக்கத்துடன் அவ்வப்போது வலித்துக் கொண் டிருந்தால் அது 'கவுட்' என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
உடல் மெலிதல், முகம் சுருங்கிப் போகுதல் போன்றவை இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். இருமலே இல்லாமல்கூட காசநோய் ஏற்படுவதுண்டு.
தொப்புளின் முன்பாகம் ஆப் பிளின் முன்பகுதி போன்று வீக்கத்துடன் காணப்பட்டால், அதுவும் இனிப்பு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஒருசில பெண் களுக்கு திடீரென்று ஈறுவீக்கம் காணப்படும்.
அவர்கள் உடனடியாக மருத்து வரின் ஆலோசனையை பெற வேண்டும்.
அந்தப் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் சூழலும் ஏற்படலாம்.

