உலகின் அபிமான நகைக்கடை நிறுவனமான ஜோயாலுக்காஸ், அட்சய திருதியை, நோன்புப் பெருநாள் பண்டிகைகளுக்காக வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த 'கேஷ்பேக்' கொண்டாட்டச் சலுகையை வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் $1,000 மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கும்போது $25 மதிப்புள்ள பரிசுப் பற்றுச்சீட்டுகளையும் $1,000 மதிப்புள்ள வைரம், போல்கி, முத்து நகைகளை வாங்கும்போது $75 மதிப்புள்ள அன்பளிப்பு பற்றுச் சீட்டுகளையும் பெறலாம். இதற்கும் மேலாக, அற்புதமான 'கேஷ் பேக்' சலுகைகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் இப்போது வெறும் 10% முன்பணம் செலுத்தி, ஜோயாலுக்காஸிடமிருந்து தங்க விலைப் பாதுகாப்பை உறுதிசெய்யலாம்.
இந்த பிரத்யேக சலுகையானது, தங்கத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது தங்கத்தின் விலை குறைந்தாலும் பாதிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் உறுதியான விலைப் பாதுகாப்பைப் பெறமுடியும்.
இந்தச் சலுகைகளை அறிவித்த ஜோயாலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜான் பால் ஆலுக்காஸ், "ஜோயாலுக்காஸ் எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவங்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.
"அட்சய திரிதியை, நோன்புப் பெருநாள் போன்ற புனிதமான நேரத்தில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்குவதை உற்சாகமாகவும் வெகுமதியாகவும் மாற்ற எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பிரத்தியேக சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். சலுகைகள் உள்ள காலத்தில் வாடிக்கையாளர்கள் 'கேஷ் பேக் கிஃப்ட்' பற்றுச்சீட்டுகள், உறுதி செய்யப்பட்ட தங்க விலைப் பாதுகாப்பை அனுபவிக்க முடியும். எங்களின் காட்சிக் கூடங்களுக்குச் சென்று இச் சலுகையை அனுபவிக்குமாறு அனைவரையும் அழைக்கிறேன். வரும் மே மாதம் 8ஆம் தேதி வரை அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் 'கேஷ்பேக்' கொண்டாட்டச் சலுகையை நீங்கள் அனுபவிக்க முடியும்," என்று ஜான் பால் கூறியுள்ளார்.

