சாலையோர இந்திய உணவுகள் விழா

சாலையோர இந்திய உணவுகள் விழா

1 mins read

ஆ. விஷ்ணுவர்­தினி

இந்­தி­யா­வின் பற்­பல பகு­தி­களுக்கும் நம்மைக் கொண்டு செல்­ல­வி­ருக்­கின்­றது ராஃபிள்ஸ் ஹோட்­ட­லில் உள்ள டிஃபன் ரூம்.

பல்­வகை இந்­திய சாலையோர உணவுப் பதார்த்­தங்­க­ளைக் கொண்டு 'ஸ்தி­ரீட் ஃபுட் ஃபெஸ்டி­வல்' என்ற உணவு வகைப் பட்­டி­யலை ஒருங்­கி­ணைக்க டிஃபன் ரூம் முயற்­சித்­துள்­ளது.

இந்த சிறப்பு உணவுப் பட்டியல் பாம்பே பேல் பூரியுடன் தொடங்கு கிறது. பாசிப் பருப்பு லட்டு, டெல்லியின் புதிய சுவையூட்டும் மஞ்சள் பருப்பு, முள்ளங்கியுடன் கூடிய கொழுக்கட்டை, பஞ்சாப்பின் பொரித்த மீன், கொல்கத்தாவின் கதி ரோல் என பட்டியல் நீள்கிறது.

இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய சுவை­களை உள்­ள­டக்கி, இந்­திய நறு­ம­ணப்­பொ­ருட்­க­ளை­யும் சமை­யல் முறை­யை­யும் கொண்டு சமைக்­கப்­படும் நான்கு வட இந்­திய உணவு வகை­கள் பட்­டி­ய­லில் அடங்­கி­யுள்­ளன.

சைவ உணவுப் பட்டியலில் பன்னீர் முதலியவை அசைவப் பொருட்களுக்கு மாற்றாக உள்ளன.

இம்மாதம் 21ஆம் தேதி­யி­ல் இ­ருந்து வரும் மே மாதம் 5ஆம் தேதி வரை மதிய, இரவு உண வுக்கு இந்த சிறப்புப் பட்­டி­யலை மக்­கள் நாட­லாம்.

சைவம், அசை­வம் என இரண்­டுக்­கும் தனி உணவு வகைப்­பட்­டி­யல்­களும் வகுக்­கப்­பட்­டுள்­ளன. இரண்­டுக்­கும் ஆரம்ப விலை­யா­னது முறையே $78, $88.

மேல் விவ­ரங்­கள் அறிய: https://tiffinroom.com.sg/