உள்ளூர் கலைஞர்களின் சங்கீத சாரல்

உள்ளூர் கலைஞர்களின் சங்கீத சாரல்

1 mins read
ce9a0454-88ea-49da-882c-533a6a97fbd3
ஏப்­ரல் 16ஆம் தேதி­யன்று நடந்த 'சங்கீதச் சாரல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர்கள். படம்: சிங்­கப்­பூர் இந்­திய சிம்­ஃபனி இசைக்­கு­ழு­ -

ஆ. விஷ்ணு வர்­தினி

உள்­ளூர் கலை­ஞர்­க­ளுக்­கான தள­மா­க­வும், இசை ரசி­கர்­க­ளுக்­கான நிகழ்­வா­க­வும் இடம்­பெற்­றது, சிங்­கப்­பூர் இந்­திய சிம்­ஃபனி இசைக்­கு­ழு­வின் 'சங்­­கீ­த­ சா­ரல்'. இசைக் கரு­வி­கள் வாசித்­தும் பாடி­யும் நிகழ்வைப் படைத்த 30 உள்­ளூர் இசை­ம­ணி­களில், சீன, மலாய் கலை­ஞர்­களும் அடங்­கு­வர். அவர்­க­ளு­டன், விஷ்ணு பாலாஜி, சுபா­ஷினி உட்­பட பல உள்­ளூர்ப் பாட­கர்­கள் பாடி மக்­களை மகிழ்­வித்­த­னர்.

கிரேத்தா ஆயர் மக்­கள் அரங்­கில் ஏப்­ரல் 16ஆம் தேதி­யன்று நடந்த இந்­நி­கழ்­வுக்கு, ஏறக்­கு­றைய 600 பங்­கேற்­பா­ளர்­கள் வருகை புரிந்­தி­ருந்­த­னர்.

பிர­பல தமிழ், இந்தி, தெலுங்கு ஆங்­கி­லப் பாடல்­களை மக்­கள் கேட்டு ரசித்­த­னர். வய­லின், கீபோர்ட், கித்­தார், தாளவாத்தியம் என பல்­வகை இசைக்­க­ரு­வி­கள் நிகழ்­வுக்கு இசை கூட்­டின.

"எங்­க­ளது ஆறு மாத உழைப்­பின் பயன், சங்­கீ­த­ சா­ரல். சிங்­கப்­பூ­ரி­லும் கடு­மை­யாக உழைத்­துக் கொண்­டி­ருக்­கும் பல திற­மை­வாய்ந்த கலை­ஞர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளுக்கு இது­போன்ற மேடை­களை வழங்க தொடர்ந்து முயற்சி செய்­வோம்," என்­றார் சிங்­கப்­பூர் இந்­திய சிம்­ஃபனி இசைக்­கு­ழு­வின் நடத்­து­நரும் நிறு­வ­ன­ரு­மான திரு எஸ். எஸ். முத்து.

பகுதிநேர­மாக இக்­கு­ழு­வில் இணைந்து பயிற்சி செய்­யும் பல்­லின கலை­ஞர்­கள் பெரும்­பா­லும் முழு­நேரமாகப் பணி­பு­ரி­வோர். கிடைக்­கும் நேரங்­க­ளி­லெல்­லாம் பயிற்சிசெய்து, கொவிட்-19 சூழ­லில் ஏற்­பட்ட பல தடை­க­ளைக் கடந்து இந்­நி­கழ்வை ஒரு குழு­வாக அரங்­கேற்­றி­யுள்­ள­தாகப் பகிர்ந்­து­கொண்­டார் திரு முத்து. மேலும், நிகழ்வைப் படைத்த பல இளைய இசை­ம­ணி­க­ளுக்­கும் வாய்ப்­ப­ளித்து ஆத­ர­வ­ளிக்க முயன்­ற­தாக அவர் கூறி­னார்.