‘அடை­யா­ளம் கருதி தமிழ்­மொழி கற்பிக்கிறோம்’

ஆ. விஷ்ணு வர்­தினி

வீட்­டுக்­கல்வி பெறும் அண்­ணன் தங்­கை­யான மத்­தா­யஸ், குவெ­னத் இரு­வ­ருக்­கும் தமிழ்­மொழி பிடித்­த­மான ஒரு பாடம். முத­லில் தந்­தை­வழி மொழி­யான சீன­மொ­ழி­யைப் பயின்று போரா­டிய இரு­வ­ருக்­கும், இயல்­பா­கவே தமிழ்­மொ­ழி­யின்­மீது ஆர்­வம் இருப்­பதை உணர்ந்த தாயார் திரு­மதி டெப்ரா அவர்­களுக்­குத் தமிழை முறை­யாக அறி­முகப்­படுத்­தி­னார்.

தமி­ழில் நூல்­கள் படிப்­ப­தும், சிறு­வர் பாடல்­க­ளைக் கேட்­ப­தும் ஏழு வயது மத்­தா­ய­ஸுக்­கும் நான்கு வயது குவெ­னத்­துக்­கும் பொழு­து­போக்­கு­க­ளா­கி­விட்­டது. வெகு விரை­வில் அவர்­கள் மொழி கற்­ற­லில் முன்­னேறத் தொடங்­கி­விட்­டது தனக்­கும் கண­வ­ருக்­கும் மகிழ்ச்­சி­ய­ளித்­த­தா­கக் கூறி­னார் திரு­மதி டெப்ரா.

வீட்­டுக்­கல்வி பெற்று வரும் பிள்­ளை­க­ளுக்­குத் திரு­மதி டெப்­ரா­வும் அவ­ரது கண­வ­ரும் ஆசி­ரி­யர்­க­ளா­க­வும் விளங்­கு­கின்­ற­னர். கண­வர் கணி­தம் கற்­றுத்­தர, மொழிப்­பா­டங்­க­ளைத் திரு­மதி டெப்ரா கற்­றுத்­த­ரு­கின்­றார்.

"என்­னைப் போல் இல்லாமல், எனது பிள்­ளை­கள் இள­மை­யி­லி­ருந்தே தமிழ்­மொ­ழியை, பண்­பாட்­டைப் பாராட்ட வேண்­டும் என்று எண்­ணி­னேன். சீனம் பேசும் குடும்­பத்­தா­ரும் எங்­க­ளது முடி­வில் துணை நின்­றுள்­ள­னர்," என்­றார் திரு­மதி டெப்ரா ஷெர்னி குவான்.

இரண்­டாம் மொழி என்­பது தனி­ம­னித அடை­யா­ளத்­துக்கு அவ­சி­யம் என்று கரு­திய கண­வர் திரு குவா­னும் பிள்­ளை­க­ளி­டத்­தில் தமிழை வளர்ப்­ப­தற்கு ஆத­ரவு தந்­த­தாக திரு­மதி டெப்ரா பகிர்ந்­து­கொண்­டார். இருப்­பி­னும், சீன, தமிழ்க் கலா­சாரக் கூறு­களை, பண்­டி­கை­களை எல்­லாம் இரு பிள்­ளை­க­ளுக்­கும் பார­பட்­ச­மின்றி அறி­மு­கப்­படுத்தி வரு­கின்­ற­னர் இரு­வ­ரும்.

"வீட்­டுக்­கல்வி முறை பிள்­ளை­க­ளி­டத்­தில் சமூக திறன்­களை வளர்க்­காது என்று பலர் குறை கூறி­யுள்­ள­னர். ஆனால், இரு­வ­ரும் எல்லா பண்­பா­டு­க­ளை­யும் மொழி­க­ளை­யும் மதித்து நடக்­கும் பக்­கு­வத்­தோடு இருக்­கின்­ற­னர். அவற்­றைப் பற்றி மேலும் அறி­வ­தற்­கும் ஆவ­லாய் உள்­ள­னர்," என்று திரு­மதி டெப்ரா குறிப்­பிட்­டார்.

திரு­மதி டெப்­ரா­வுக்கு இள­மை­யில் தமிழ்ப் புத்­த­கங்­களே பிடிக்­கா­மல் இருந்­தது. கட்­டா­யப் பாட­மாக மட்­டுமே தமி­ழைக் கற்ற அவ­ரது வருத்­தத்­தைப் போக்­கும் வண்­ணம், பிள்­ளை­கள் இரு­வ­ரும் நூல­கத்­துக்­குச் செல்­லும்போது தானா­கவே முன்­வந்து தமிழ்ப் புத்­த­கங்­களை இர­வல் பெறு­வ­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

பிள்­ளை­க­ளின் தமிழ்­மொழி கற்­றல் குறித்து இன்ஸ்­டகி­ராம் (@kwanslearntamil) வாயி­லாக பதி­விட்டு வரும் திரு­மதி டெப்ரா, மற்ற பெற்­றோ­ரு­டன் சமூக ஊட­கம் மூலம் இணை­வ­தற்கு இது வாய்ப்­ப­ளித்­துள்­ள­தா­கக் கூறி­னார். இதன் மூலம், தமிழ்­மொழி கற்­றலை மேம்­படுத்­து­வ­தற்­கான புத்­தாக்க யோச­னை­களை ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் பகிர்ந்­து­கொண்டு பய­ன­டை­கின்­ற­னர். வீட்­டில் பெரும்­பா­லும் ஆங்­கி­லம் பேசு­வ­தால், பேச்சு தமிழ் கற்­ப­தற்கு வாய்ப்­பில்­லா­த­தை­யும், அது கருதி பேச்சு தமி­ழில் உரை­யாட முயற்சி செய்து வரு­வ­தா­க­வும் கூறி­னார் திரு­மதி டெப்ரா.

"தொலைக்­காட்­சி­களில், திரைப்­ப­டங்­களில் தமிழ்­மொ­ழி­யைக் கேட்­ப­தை­விட என்­னி­டத்­தி­லி­ருந்து தமி­ழைக் கேட்­கும்­போது அவர்­களும் அதில் தொடர்ந்து ஆர்­வம் காட்­டு­வர் என்று நம்­பு­கி­றேன். அவர்­க­ளு­டன் சேர்ந்து நானும் தமிழ்­மொ­ழி­யைக் கற்று வரு­கி­றேன்," என்­றார் திரு­மதி டெப்ரா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!