வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ஹர்­ஷிதா பாலாஜி

வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளுக்கு சமூக ஆத­ர­வை­யும் பயிற்­சி­யை­யும் வழங்­கும் 'ஃபாஸ்ட்' எனப்­படும் நிறு­வ­னம் கடந்த 24ஆம் ேததி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 'இஃப்தார்' எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்­தியா, இலங்கை, இந்தோ னீசியா, பிலிப்­பீன்ஸ், மியன்­மார் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த பணிப்­பெண்­கள் தங்­க­ளது பாரம்­ப­ரிய உணவு வகை­க­ளைச் சமைத்து வந்து பகிர்ந்­து­கொள்­ளும் புதிய நட­வ­டிக்கை இந்­நி­கழ்ச்­சி­யில் இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூ­ரின் பல்­லின சமு­தா­யத்­தை­யும் இன, மத நல்­லி­ணக்­கத்­தை­யும் போற்­றும் வண்­ணம் அனைத்து மதங்­க­ளை­யும் சேர்ந்த பணிப்­பெண்­களும் இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

புனித ரம­லான் மாதத்­தின்­போது பணிப்­பெண்­கள் தங்­க­ளது குடும்­பத்­தி­னரை விட்­டுப் பிரிந்­தி­ருப்ப தால் அவர்­கள் கவ­லை­யின்றி பாது­காப்­பான இடத்­தில் நோன்பு திறப்­ப­தற்கு ஏது­வாக 'ஃபாஸ்ட்' நிறு­வ­னம் தங்­கள் வளா­கத்தை திறந்து வைத்­தி­ருக்­கின்­றது.

'ஃபாஸ்ட்' மனி­த­வள அமைச்­சின் ஓர் அங்­க­மாக செயல்­பட்டு வரு­கின்ற அறக்­கொடை நிறு­வ­ன­மா­கும்.

வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளுக்கு, பணி சூழலுக்கும்-வாழ்க்கை முறைக்­கும் இடையே ஒரு சம­நிலையை மேம்­ப­டுத்­தும் வாய்ப்­பு­கள், சமூக ஆத­ரவு, பயிற்சி ஆகி­ய­வற்றை 2005ஆம் ஆண்­டில் இருந்து இந்­நி­று­வ­னம் வழங்கி வரு­கின்­றது.

'ஃபாஸ்ட்' நிறு­வ­னம் இது­வரை ஏறக்­கு­றைய 25,000 வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளுக்கு திறன் மேம்­பாட்­டுத் திட்­டங்­களை நடத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!