கவிமாலை நடத்தும் தமிழ்மொழி விழாவின் நிறைவு விழா வரும் மே மாதம் 1ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு டெசன்சன்ஸ் சாலையில் உள்ள சிவில் சர்விஸ் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பிரபல சொத்து முகவை நிறுவனமான புரோப்நெக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு இஸ்மாயில் கஃபூர், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு. மனோகரன் ஆகிய இருவரும் கலந்துகொள்வர்.
சிறப்பு அங்கமாக ஒலி 96.8ன் திரு.முகமது ரஃபி வழிநடத்தும் கவிமனமும் இசை மணமும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் சிங்கர் சூர்யா ஆனந்த், அனுபமா முரளி, முனைவர் எஸ் பி ஜெயராஜ்தாஸ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு இன்னிசை நிகழ்ச்சியைப் படைக்க உள்ளனர்.
மேலும், கவிமாலை இளைஞர் அணியின் விஷ்ணுவர்த்தினி, சரண்யா முசிலா, ரகுநந்தன், சுவேதா, பிரபவ், ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து படைக்கும் 'ஆர்க்கிட் பூங்கா' எனும் கவிதை நாடகமும் இடம்பெற இருக்கிறது.
அத்துடன், இளம் கவிஞருக்கான தங்க முத்திரை விருது, சிங்கப்பூரில் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் பங்காற்றிய தமிழ்ச் சான்றோருக்கு கணையாழி விரு தும் வழங்கப்படவுள்ளன.
தொடக்கநிலை மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி, கவிதை மொழிபெயர்ப்புக்கான பரிசளிப்பு போன்ற அங்கங்களும் இடம்பெற இருக்கிறது.
நேரடி நிகழ்ச்சிக்கு கீழ்க்கண்ட இணைப்பின் வழி முன்பதிவு செய்துகொள்ளவும். http://tinyurl.com.52/htftpm.
தொடர்புக்கு லலிதா சுந்தர் 9060 4464

