முன்­னோடி தமிழ் எழுத்­து­ரு­வின் புதிய எழுச்சி

முன்­னோடி தமிழ் எழுத்­து­ரு­வின் புதிய எழுச்சி

2 mins read
255276f3-f7de-4159-91aa-1995d21dd17a
தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் கடந்த ஞாயிறன்று காலை நடை­பெற்ற 'கணியன் 2.0' எழுத்துரு வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் எஸ் மணியம். படம்: ஜனார்த்தனன் -

கி. ஜனார்த்­த­னன்

தமிழ்க் கணி­மை­யின் வெள்­ளி­விழாவை முன்­னிட்டு 'உத்­த­மம்' தமிழ் தக­வல் தொழில்­நுட்ப அனைத்­து­ல­கக் கருத்­த­ரங்கு, 'கணி­யன் 2.0' எழுத்­து­ருவை வெளி­யிட்­டுள்­ளது.

தமிழ்க் கணி­மை­யில் முன்­னோ­டி­யா­கத் திகழ்ந்த நா. கோவிந்­த­சாமி 1990களில் கணி­யனை அறி­மு­கம் செய்­ததை அடுத்து அதன் இரண்­டா­வது வடி­வ­மாக இது வெளி­வந்­துள்­ளது.

தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் கடந்த ஞாயிறன்று காலை நடை­பெற்ற வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ் மொழி கற்­றல் வளர்ச்­சிக்­கு­ழு­வின் (TLLPC) தலை­வ­ரு­மான திரு விக்­ரம் நாயர் சிறப்பு விருந்­தி­ன­ரா­க கலந்­து­கொண்­டார்.

எழுத்­து­ருக்­களை உரு­வாக்­கிய திரு எஸ். மணி­யம், இதுகுறித்து பார்­வை­யா­ளர்­கள் எழுப்­பிய கேள்வி ­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார்.

தேசிய கல்வி நிலை­யத்­தில் விரி­வு­ரை­யா­ளர் அம­ரர் நா கோவிந்த சாமி, 1995ல் கணி­யன் எழுத்­துரு மென்­பொ­ருளை முத­லில் வெளி­யிட்­டார்.

1999ல் அவ­ரது மறை­வுக்­குப் பிறகு மெல்ல மறைந்­து­போன கணி­யன் எழுத்­து­ரு­வின் பயன்­பாட்டை மீண்­டும் தட்­டி­யெ­ழுப்ப புதிய 2.0 எழுத்­து­ருவை உரு­வாக்­கி­ய­தாக நியூ வேவ் கன்­சல்­டிங் பிரை­வேட் லிமிட்­டட் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் எஸ் மணி­யம் தெரி­வித்­தார்.

'யூனி­கோட்' எனப்­படும் கிட்­டத்­தட்ட 25 புதிய ஒருங்­குறி எழுத்­துருக்­களை kanian.io என்ற இணை­யத்­த­ளத்­தில் ஆர்­வ­முள்­ள­வர்­கள் பதி­வி­றக்­கம் செய்­ய­லாம்.

தமி­ழில் தட்டச்சு செய்ய பழைய 'டைப்­ரைட்­டர்', 'தமிழ்99' விசைப்­ப­ல­கை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோ­ரும் ஒலி­பெ­யர்ப்பு முறை­யைப் பயன்­படுத்து­வோ­ரும் இந்த எழுத்­து­ருக்­களைப் பயன்­ப­டுத்த முடி­யும்.

எழுத்­து­ருக்­க­ளைப் பதி­வி­றக்­கம் செய்­யும் பய­னீட்­டா­ளர்­கள், இவற்­று­டன் 200 'கிலிப்­ஆர்ட்' ஓவி­யங்­க­ளை­யும் பெறு­வர்.

இணை­யச் சேவை இல்­லா­தோ­ருக்­கும் இல­வச 'தம்ப் டிரைவ்' கரு­வி­யின் மூலம் எழுத்­து­ருக்­கள் வழங்­கப்­படும் என்று எழுத்­து­ருக்­கான வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் அறி­விக்­கப்­பட்­டது.

கணி­யன் 2.0 சின்­னத்தை உரு­வாக்­கிய தக­வல் தொழில்­நுட்ப நிபு­ணர் நித்­ய­ஸ்ரீ, 23, இந்த எழுத்­து­ரு­வின் மறு­ம­லர்ச்­சிக்­குப் பங்­காற்ற முடிந்­த­தில் தமது மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னார்.

இந்த எழுத்­து­ருக்­க­ளைத் தமது பள்ளி பணித்­திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­போ­வ­தா­கக் கூறும் உயர்­நிலை 1 மாணவி வெனியா, 13, 'கிலிப்­ஆர்ட்' ஓவி­யங்­களும் வழங்­கப்­பெ­று­வது கூடு­தல் சிறப்பு என்­றார்.

வீட்­டுப்­பா­டங்­க­ளுக்கு இந்த எழுத்துருக்கள் பய­னுள்­ள­தாக இருக்­கும் என தான் கரு­து­வ­தாக தொடக்­க­நிலை 5 மாண­வன் ஜெர்­வேஸ், 11, தெரி­வித்­தார்.