மன அழுத்தம் இதயத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்போது, அதை முற்றிலும் தவிர்ப்பது என்பது முடியாத காரியம்.
மவுண்ட் எலிசபெத் ெநாவீனா ஸ்பெஷலிஸ்ட் சென்டரில் பணியாற்றிவரும் மூத்த ஆலோசகரும் இதயநோய் நிபுணருமான டாக்டர் ரெஜினால்ட் லியூ, மன அழுத்தத்தை நிர்வகிக்க சில வழிமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மனதை அைமதிப்படுத்துங்கள்
அவ்வப்போது சற்று நேரம் ஓய்வாக இருப்பது மன அழுத்தத்துக்கான விளைவுகளில் இருந்து உங்கள் இதயத்தைப் பாதுகாக்க உதவும்.
தியானம், தசைகளைத் தளர்வாக்கும் வகையில் ஓய்வெடுப்பது, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். இவற்றில் எது உங்களுக்குப் பயன் அளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதனைப் பயிற்சி செய்யலாம்.
அழுத்தத்தைக் குறையுங்கள்
நம் வாழ்வின் ஒருசில அம்சங்கள் எப்போதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வேலை நெருக்கடிகள், தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவு கள், குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்டவை மன அழுத்தத்தை தூண்டும் காரணிகள்.
மன அழுத்தம் தூண்டப்படுவதை உங்களால் தவிர்க்க முடியாவிடில், உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஓய்வு எடுக்கவும். உங்களால் முடியாத வேலைகளை முடியாது என்று சொல்லவும் அல்லது தேவைப்படும்போது உதவி கேட்கவும் தயங்காதீர்கள்.
ஆலோசனை நாடவும்
நீங்கள் தொடர்ந்தாற்போல் கவலையுடனோ பதற்றத்துடனோ இருந்தாலும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டாலும் மன அழுத்தம் தூண்டப்படுவதை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தாலும் மனநல நிபுணரிடம் ஆேலாசனை பெறவும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த நிவாரணியாக உடற்பயிற்சிகள் உள்ளன. ஏனெனில், இது எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இது நேர்மறை அணுகுமுறையையும் ஆற்றலையும் பராமரிக்க உதவுகிறது. யோகா, தைச்சி அல்லது நடனமாடுவது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாகச் செய்யவேண்டாம் என இதய நிபுணர் ரெஜினால்ட் லியூ அறிவுறுத்தி உள்ளார்.

