புற்றுநோய்க்கு எதிராக விரதம்: நிபுணர் கருத்து

புற்றுநோய்க்கு எதிராக விரதம்: நிபுணர் கருத்து

4 mins read

விர­தம் இருப்­ப­தால் உட­லை­யும் உள்­ளத்­தை­யும் சிறந்த நிலைக்­குக் கொண்­டு­வ­ர­லாம் என்ற நம்­பிக்கை, பல கால­மா­கவே வெவ்­வேறு கலா­சா­ரங்­களில் வேரூன்­றி­விட்­டது. உதா­ர­ணத்­திற்கு, ஆன்­மிக அறி­வொளி பெறு­வ­தற்­குப் பழங்­காலத்து யோகி­கள் விர­தம் இருத்­தலை ஓர் உத்­தி­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.

சத்து அதி­க­முள்ள உணவை உண்­டால் உட­லில் உள்ள புற்­று­நோய் உயி­ர­ணுக்­க­ளுக்கு அது தீனி­யாக அமைந்­து­வி­டும் என்­றும் அவற்­றின் வளர்ச்­சி­யைத் துரி­தப்­படுத்­தி­வி­டும் என்­றும் சிலர் கூறு­வதை நீங்­கள் கேட்­டி­ருக்­க­லாம்.

அதற்கு மாறாக, விர­தம் இருப்­ப­தால் புற்­று­நோய் உயி­ர­ணுக்­கள் வளர வாய்ப்­பி­ருக்­காது என்­றும் கூறக் கேட்­டி­ருக்­க­லாம்.

இருப்­பி­னும், புற்­ற­நோய்க்கு எதி­ராக விர­தம் இருப்பதை ஓர் உத்­தி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தன் அபா­யத்தை முத­லில் வலி­யு­றுத்த வேண்­டும் என்று த கேன்­சர் சென்­ட­ரின் மருத்­துவ இயக்­கு­ந­ரும் புற்­று­நோயி­யல் ஆலோ­ச­க­ரு­மான டாக்­டர் வோங் செங் வெங் தெரிவித்து உள்ளார்.

ககெக்ஸியா, எனரெக்ஸியா

உடல் எடை குறை­வதே, புற்­று­நோ­யா­ளி­கள் பல­ரும் எதிர்­நோக்­கும் ஒரு பிரச்­சினை. அதி­லும் புற்­று­நோயால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு இப்­பி­ரச்­சினை மிகத் தீவி­ர­மாக இருக்­கும்.

'ககெக்­ஸியா' என்ற இந்­தப் பிரச்­சினை புற்­று­நோ­யா­ளி­களில் 50 முதல் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு உண்டு என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

உடல் எடை கணி­ச­மான அளவு குறை­யும்­போது உடல் பல­வீ­ன­மடைந்து வாழ்க்­கைத்­த­ரத்­தைப் பாதித்­து­வி­டு­கிறது. உடல் எடை­யில் 40% படிப்­ப­டி­யா­கக் கரைந்­த­பின்­ மர­ணம் நேரலாம்.

இவ்­வாறு புற்­று­நோ­யா­ளி­க­ளி­டையே 'ககெக்­‌ஸியா' ஏற்­ப­டு­வ­தற்­குப் பல கார­ணங்­கள் உண்டு.

ஒரு­வர் புற்­று­நோ­யால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் நச்சு­கள் அவ­ரின் உட­லில் பரவி, அழிவை நோக்­கிய நிலைக்­குக் கொண்டு செல்­லும். இந்­நி­லை­யில் கொழுப்பு மற்­றும் தசை திசுக்­களை உடல் அழிக்கத் தொடங்­கி­வி­டும்.

இவ்­வாறு உடல் தன்­னையே அழித்­துக்­கொள்­ளும் நிலை­யில் புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூடிய 'என­ரெக்­ஸியா' எனும் பசி­யற்ற உளநோயால் குறைந்த அளவு கலோ­ரி­கள் உட­லின் நிலை­மையை மேலும் மோச­மாக்­க­லாம்.

சில நோயா­ளி­க­ளுக்கு, அந்­தப் புற்­று­நோயே செரி­மான அமைப்­பின் இயல்­பான செயல்­பாட்­டுக்­குத் தடங்­க­லாக இருக்­கும். இத­னால் உட­லுக்­குத் தேவை­யான சத்­து­கள் கிட்­டா­மல் பிரச்­சினை மேலும் மோச­ம­டை­ய­லாம்.

இந்­தக் கார­ணங்­க­ளால் தேவை­யான சத்து கிடைக்­காத நிலை­யில் இருக்­கும் புற்­று­நோ­யாளி ஒரு­வர், விர­தம் இருப்­ப­தா­கக் கூறி தானே கலோ­ரி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்­வது கேடு விளை­விக்­கும் என்­பதே உண்மை. அத­னால்­தான், புற்­று­நோய்க்கு எதி­ரா­கப் போராடு­வதில் போது­மான சத்­து­ணவு உட்­கொள்­வதன் முக்­கி­யத்­து­வத்­தைப் புற்­று­நோ­யி­யல் நிபு­ணர்­கள் வலி­யுறுத்­துகின்றனர்.

விரதத்தின் ஆற்றல்

இதற்­கி­டையே, முழு­மை­யான சிகிச்சை முறை­யில் விர­தத்­தின் ஆற்­ற­லை­யும் பய­னை­யும் குறிப்­பிடும் ஆதா­ரங்­க­ளை­யும் இனி காண­லாம். விர­தத்­தால் நோய் எதிர்ப்பு சக்­தி­யு­டைய பழைய உயி­ர­ணுக்­கள் அழி­வ­தைத் தூண்­டி­விட முடிந்­த­தாக விலங்­கு­க­ளின் மீது நடத்­தப்­பட்ட சோத­னை­கள் காட்­டி­யுள்­ளன.

இருப்­பி­னும், உணவுண்டபின் நோய் எதிர்ப்­புச் சக்­தி­கொண்ட பழைய உயி­ர­ணுக்­க­ளுக்­குப் பதி­லாக புதி­யவை உரு­வா­கின. புற்று­நோய்க்கு எதி­ரா­கப் போரா­டு­வ­தற்கு நோய் எதிர்ப்பு அமைப்­பு­முறை புது வேகம் பெற்­றது. இத­னால், கட்டி வளர்­வ­தும் மெது­வ­டைந்­த­தாக கண்­ட­றி­யப்­பட்­டது.

நம்பிக்கை அளிக்கும் ஆய்வுகள்

கடந்த நவம்­ப­ரில் இத்­தா­லிய புற்­று­நோய் கழ­கத்­தைச் சேர்ந்த அறி­வி­யல் நிபு­ணர்­கள் வெளி­யிட்ட ஆய்வு அறிக்கை ஒன்­றில் இது தொடர்­பான தக­வல்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆய்­வில் வெவ்­வேறு புற்­று­நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 101 நோயா­ளி­கள் பங்­கேற்­ற­னர். மூன்று வாரக் கால­கட்­டத்­தில் இவர்­க­ளுக்கு ஐந்து நாள்­களில் மட்­டும் ஒவ்­வொரு நாளுக்­கும் சுமார் 300 கலோ­ரி­கள் அடங்கிய உண­வு வழங்கப்பட்டது.

அப்­போது இந்த நோயா­ளி­க­ளின் உட­லில் இருந்த கட்­டி­களில் புற்­று­நோய்க்கு எதி­ரான நோய் எதிர்ப்பு உயி­ர­ணுக்­கள் இயங்கியதைக் காண முடிந்­தது.

'இன்­சு­லின்' போன்ற வளர்ச்­சி­யைத் தூண்­டும் ஹார்­மோன்­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் வீக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் சாரத்­தை­யும் விர­தம் இருத்­தல் குறைப்­ப­தாக விலங்­கு­கள் மீது செய்­யப்­பட்ட ஆராய்ச்­சி­கள் காட்­டு­கின்­றன.

ஆரம்­பக்­கட்ட மார்­ப­கப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட 2,400க்கும் மேற்­பட்ட மாதர் தொடர்­பான மற்­றோர் ஆய்­வி­லும், இர­வு­வேளை விர­தத்­தின் பலன் தெரிந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

விர­தம் இல்­லா­தோ­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் 13 மணி­நே­ரம் அல்­லது அதற்கு மேல் விர­தம் இருந்த பெண்­க­ளுக்கு மீண்­டும் மார்­ப­கப் புற்­று­நோய் ஏற்­படும் அபா­யம் 30% குறைந்­தி­ருந்­தது.

'கீமோ­தெ­ரபி' செல்­வ­தற்­கு­முன் விர­தம் இருந்­தால் சாதா­ரண உயி­ர­ணுக்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய சிகிச்­சை­யின் பக்­க­வி­ளை­வு­க­ளைக் குறைத்­துக்­கொள்ள உத­வும் என்­றும் புற்­று­நோய்க்கு எதி­ரான சிகிச்­சை­யின் பலனை வலுப்­ப­டுத்­தும் என்­றும் ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

போதிய ஆதாரம் இல்லை

இவ்­வாறு இடை­யி­டையே விர­தம் இருப்­பதை வழக்­க­மான புற்­று­நோய் சிகிச்சை உத்­தி­மு­றை­களில் ஒருங்­கி­ணைப்­ப­தால் விளை­வு­கள் மேம்­ப­ட­லாம் என்­பதை ஆய்­வு­கள் காட்டி­னா­லும் இந்த முடி­வு­கள் யாவும் ஆரம்­பக்­கட்ட முடி­வு­களே.

புற்­று­நோ­யா­ளி­கள் விர­தத்தை மேற்­கொள்­ளத் தொடங்­க­லாம் என்று கூற போதிய ஆதா­ரங்­கள் இல்லை. அறி­வி­யல் ஆதா­ரங்­கள் அடிப்­ப­டை­யில் ஒரு­நாள் புற்­று­நோய் சிகிச்சை உத்­தி­யாக விர­தம் இருப்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­லாம்.

ஆனால், அப்­போ­து­கூட புற்­று­நோ­யி­யல் நிபு­ணர்­க­ளின் கண்­காணிப்­பில் கவ­னத்­து­டன் மேற்­கொள்­ளப்­படும் ஒரு செயல்­மு­றை­யாக அது இருக்­கும்.

நோயா­ளி­களே சுய­மாக மேற்­கொள்­ளும் ஒன்­றாக இருக்­காது. அத­னால், புற்­று­நோய்க்கு எதி­ராக விர­தம் இருப்­பதை ஓர் உத்­தி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தில் அவ­ச­ரம் வேண்­டாம் என்றார் டாக்டர் வோங்.

செய்தி: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்