நாட்டிய நிகழ்ச்சிவழி மாணவர்களுக்கு அரிய சங்க இலக்கிய நூல் அறிமுகம்

நாட்டிய நிகழ்ச்சிவழி மாணவர்களுக்கு அரிய சங்க இலக்கிய நூல் அறிமுகம்

2 mins read
cc82dea6-7165-488f-9ca6-d5b8a564b79e
படம்: சக்தி நுண்கலைக் கூடம் -

கி. ஜனார்த்­த­னன்

சங்க இலக்­கி­யங்­களில் ஒன்­றான 'இனி­யவை நாற்­பது' என்ற நூலின் பொருளை, கலை­ந­யத்­து­டன் ஆழ­மா­கப் புரிந்­து­கொள்­ளும் வாய்ப்பை சக்தி நுண்­க­லைக் கூடத்­தின் 'மகிழ்ச்சி' என்ற நிகழ்ச்­சி­யைப் பார்த்­த­வர்­கள் பெற்­ற­னர்.

சங்­கப் புல­வர் பூதஞ்­சே­த­னார் புனைந்த இனி­யவை நாற்­பது என்ற நீதி நூலில் இருந்து சில வாக்­கியங்­கள் நடன வடி­வி­லும் கதை வடி­வி­லும் விளக்­கப்­பட்­டி­ருந்­தன.

'ஊருங் கலிமா வுர­னு­டைமை முன்­னி­னிதே', 'ஐ வாய வேட்கை அவா அடக்­கல் முன் இனிதே' போன்ற பழந்­த­மிழ் வரி­க­ளுக்­குச் சிறார்­கள் விளக்­கம் அளித்­தி­ருந்­த­னர். அந்த வரி­க­ளின் பொருளை உணர்­வு­ப்பூர்­வ­மாக விளக்­கு­வ­தற்­குச் செவ்­வி­சை­யு­டன் கூடிய பர­த­நாட்­டிய அங்­கங்­கள் இடம்­பெற்­றன. இவற்­று­டன் 'காஹுட்' மென்­த­ளத்­தின் வாயி­லாக புதிர் அங்­கம் ஒன்­றும் வெவ்­வேறு வய­துப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு நடத்­தப்­பட்­டது.

நடன ஆசி­ரி­யர் திரு­வாட்டி தேவி வீரப்­ப­னின் இயக்­கத்­தில் உரு­வாக்­கப்­பட்ட இந்­நி­கழ்ச்­சி­யில் மொத்­தம் 28 மாண­வக் கலை­ஞர்­கள் பங்­கேற்­ற­னர். இதற்­கான ஏற்­பா­டு­கள் ஜன­வரியில் தொடங்­கின.

"2020ல் எங்­கள் பள்ளி மாண­வர்­க­ளின் அரங்­கேற்­றத்­தில் சிலப்­பதி­கா­ரக் கதை ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. அதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­ததை அடுத்து 2020ஆம் ஆண்டு தமிழ் மொழி மாதத்­தின்­போது புற­நா­னூற்றுப் பாடல்­க­ளைப் படைத்­தோம்," என்று திரு­வாட்டி தேவி கூறி­னார். செய்­யுள் வரி­க­ளைக் கூறு­வ­தற்­கும் கதை சொல்­வ­தற்­கும் பிள்­ளை­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கச் சவா­லாக இருந்­த­தாக திரு­வாட்டி தேவி கூறி­னார்.

உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் உள்ள சக்தி நுண்­க­லைக் கூடத்­தில் கிட்­டத்­தட்ட 90% நட­வ­டிக்­கை­கள் தமி­ழில் நடத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு­வாட்டி தேவி, இனி­வ­ரும் தமது பள்­ளி­க­ளின் தயா­ரிப்­பு­கள் தமிழ் இலக்­கி­யத்தை ஒட்­டிய கருப்­பொ­ரு­ளைச் சார்ந்­திருக்­கும் எனக் கூறி­னார்.

நிகழ்ச்­சி­யில் பங்கேற்ற உயர்­நிலை 3 மாணவி ஹர்­ஷினி ஹரி­தாஸ், இந்த அனு­ப­வம்­வழி இனி­யவை நாற்­பது என்ற ஒரு நூல் தமக்கு அறி­மு­க­மா­ன­தா­கத் தெரி­வித்­தார்.

"இந்த ­நீதி நூல் எனக்­குப் பல வாழ்க்­கைப் பாடங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்­துள்­ளது," என்று அவர் கூறி­னார்.