தமிழ்மொழி மாதம்: இவ்வாரம் நடைபெறும் நிகழ்ச்சிகள்

தமிழ்மொழி மாதம்: இவ்வாரம் நடைபெறும் நிகழ்ச்சிகள்

2 mins read

'தமிழ்ச் செயலி உருவாக்கம்'

(தமிழ் பயிலும் உயர்நிலைப்பள்ளி

மாணவர்களுக்கான பயிலரங்கு/போட்டி)

தமிழ் மொழி கற்றலுக்காகவும் கற்பித்தலுக்காகவும் பங்கேற்பாளர்கள் செயலிகளை உருவாக்கக் கற்றுக்கொள்வர். ஐபில்ட் போன்ற இலவச மென்கருவிகளைக் கொண்டு செயலிகளை மட்டுமின்றி கையேடுகள், அறிக்கைகள், அகராதிகள் போன்றவற்றை உருவாக்க பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை 29 ஏப்ரல்

மாலை 4 மணி முதல் 6 மணி வரை

ஏற்பாட்டாளர்: பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

இடம்: ஸூம் (பதிவு செய்துள்ள

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும்)

பாரதியும் நானும் (நாடகம்)

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கையை அவரது குடும்பத்தினரின் பார்வையிலிருந்து சித்திரிக்கிறது. பாரதியாருடன் சம காலத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமைகள், சுதந்திரப் போராட்டக்காரர்கள் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் இந்தப் படைப்பில் இடம்பெறும்.

சனிக்கிழமை 30 ஏப்ரல்

இரவு 8 மணி

ஏற்பாட்டாளர்: அதிபதி அனைத்துலக

நாடக நிறுவனம்

இடம்:யூடியூப்@அதிபதி அனைத்துலக அரங்கு

தமிழின் ஏழு அற்புதங்கள் (இசை நிகழ்ச்சி)

பெயர்பெற்ற உள்ளூர் குழல் கலைஞர் நிரஞ்சன் பாண்டியன் உருவாக்கிய ஏழு படைப்புகளை அவரும் பிரம்மாஸ்த்ரா இசைக்குழுவும் படைக்க இருக்கின்றனர். தமிழுக்காக சமர்ப்பிக்கப்படும் இந்த இசையில் உள்ளூர் பாடலாசிரியர்களும் பாடகர்களும் அங்கம் வகிப்பர்.

சனிக்கிழமை 30 ஏப்ரல்

இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை

ஏற்பாட்டாளர்: பிரம்மாஸ்த்ரா இசைக்குழு

இடம்: தேசிய நூலக வாரிய நாடக நிலையம்

கதை நேரம் 2.0

இந்நிகழ்ச்சியின்போது நான்கு தமிழ் ஒலிப் புத்தகங்களும் 4 உயிரோவியக் கதைகளும் வெளியிடப்படும். ஆசிரியர்களும் உள்ளூர் எழுத்தாளர்களும் உருவாக்கிய இந்தக் கதைகள் www.kathaineram.com என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியில் கருத்தரங்கும் பரிசு வழங்கும் அங்கமும் நடைபெறும்.

சனிக்கிழமை 30 ஏப்ரல்

காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை

இடம்: தேசிய நூலக வாரியம் - த போர்ட்

கவியும் நாட்டியமும்

13 வயது முதல் 25 வரையிலான இளையர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ்க் கவிதை ஒன்றை ஒட்டிய பாடலுக்காக நடனம் ஆடவேண்டும். அந்தக் கவிதையின் சிறப்பு குறித்தும் சிற்றுரை ஆற்றவேண்டும்.

சனிக்கிழமை 30 ஏப்ரல்

பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை

ஏற்பாட்டாளர்: ஓம்கார் கலைக் குழு

இடம்: பெக் கியோ சமூக மன்றம்