உடற்பயிற்சியும் உணவுமுறையும் முக்கியம்

உடற்பயிற்சியும் உணவுமுறையும் முக்கியம்

1 mins read
a0f60712-1c21-4a68-9096-7dd7a988c8dc
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெயர், வயது: யோகேந்திரன் கிருஷ்ணமூர்த்தி, 39

தொழில்: வர்த்தக விமானி

உயரம்: 1.76 மீ.

எடை: 68 கிலோ

உடற்பயிற்சித் திட்டம்

வாரத்தில் நான்கு முறை ஓடுவேன். 2.4 கிலோமீட்டர் தொலைவை ஒன்பது நிமிடங்களுக்குள் முடிப்பேன். வாரத்தில் நான்கு முறை எடை தூக்கும் பயிற்சிகள் செய்வதுடன் கட்டுடலும் வலிமையும் தரும் பயிற்சிகள் செய்வேன். வெவ்வேறு தசைப் பகுதிகளை இப்பயிற்சிகள் குறிவைக்கும். 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்திற்கு என் பயிற்சிகள் நீடிக்கும்.

உணவுமுறை

ஒரு நாளில் இரண்டு முறை சாப்பிடுவேன். இரவில் இறைச்சி, காய்கறிகள் மட்டுமே சாப்பிடுவேன். நொறுக்குத் தீனியை முடிந்தவரை சாப்பிடமாட்டேன். ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்த்துவிட்டு என் உணவுமுறையை ஒழுங்குபடுத்தியபோது கட்டுடலை மேலும் விரைவாகப் பெற்றேன்.