ஈகைத் திருநாளை முன்னிட்டு உணவுப்பொருள் உதவி

ஈகைத் திருநாளை முன்னிட்டு உணவுப்பொருள் உதவி

2 mins read
573aa3f2-c48b-4b83-9527-1bad5eb2f37c
தொண்டூழியர்கள் கடந்த சனிக்கிழமை புக்கிட் மேரா, ஜூரோங், பொங்கோல் ஆகிய இடங்களில் வசிக்கும் வசதி குறைந்­தோ­ருக்கு உண­வுப் பொட்­ட­லங்­களை விநியோகம் செய்தனர். படம்: ஆரஞ்சுடீ & டை -

கி.ஜனார்த்­த­னன்

புனித ரம­லான் மாதத்­தில் வசதி குறைந்­தோ­ருக்கு உண­வுப் பொட்­ட­லங்­களை விநி­யோ­கம் செய்ய தொண்­டூ­ழி­யர்­கள் படை­யா­கத் திரண்டு வசதி குறைந்­தோ­ரின் வீடு­க­ளுக்­குச் சென்­ற­னர்.

வர்த்­தக சொத்­துச் சந்தை சேவை­களை வழங்­கும் 'ஆரஞ்­சுடீ அன்ட் டை' நிறு­வ­னம், சமய நல்­லி­ணக்க ஆர்­வ­லர் அமைப்­பான 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்­பு­டன் இணைந்து 'விழாக்­காலப் பரிவு 2022' என்ற இந்­தத் திட்­டத்­தின்­படி அன்­ப­ளிப்­புப் பொட்­ட­லங்­களை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை விநி­யோ­கம் செய்தது.

வசதி குறைந்த 500 குடும்­பங்­க­ளி­டம் இந்­தப் பொட்­ட­லங்­க­ளைக் கொண்டு சேர்க்க 'ரோசஸ் ஆஃப் பீஸ்' ஏழு பங்­கா­ளித்துவ அமைப்­பு­க­ளு­டன் இணைந்­து செயலாற்றியது.

தாய்­லாந்து வாசனை அரிசி, சவூதி பேரீச்­சம்பழங்­கள், 'மேகி நூடல்', 'குவேக்­கர் ஓட்ஸ்' உள்­ளிட்ட 13 பொருள்க­ளைக் கொண்டிருந்தது இந்த அன்பளிப்புப் பொட்டலங்கள்.

இவற்றை விநி­யோ­கம் செய்­யத் தொடங்­கும் நிகழ்ச்சி, ஏப்­ரல் 23ஆம் தேதி சனிக்­கி­ழ­மை­யன்று தோ பாயோ வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள 'ஆரஞ்­சுடீ அன்ட் டை' கட்­ட­டத்­தில் நடந்­தே­றி­யது.

நிகழ்ச்­சி­யின்­போது சிறப்­புரை ஆற்­றிய பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான், கிரு­மிப்­ப­ர­வ­லால் பொரு­ளி­யல் ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வும் பணி­யில் அர­சாங்­கத்­து­டன் வர்த்­தக நிறு­வ­னம் பங்­க­ளித்து வரு­வ­தைச் சுட்­டி­னார்.

"கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை எதிர்­கொள்­ளும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மாறி வரும் இந்­நி­லை­யில், நம்­மில் சிலர் தொடர்ந்து சிர­மத்தை எதிர்­நோக்­கு­வதை நாம் மறக்­கக்­கூடாது.

"பல கைகள் சேர்ந்து உத­வும் இந்த உத்­தி­யைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­த­வேண்­டும்," என்று இவர் கூறி­னார்.

"மக்­கள், அர­சாங்­கம், தனி­யார் துறை ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான கூட்­டு­றவு தொடர்ந்து வலு­வாக இருந்­தால் சமு­தா­யத்­தின் மீள்­தி­றன் அதி­க­மா­கும்," என்­றும் டாக்­டர் மாலிக்கி தெரி­வித்­தார்.

பல இன, சமய தொண்­டூ­ழி­யர்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் இணைந்து நிதித்­தி­ரட்டு, தள­வா­டம், விநி­யோ­கம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு உத­வி­யது மனதை நெகிழ வைத்­த­தாக 'ரோசஸ் ஆஃப் பீஸ்' நிறு­வ­ன­ரும் முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முகம்­மது இர்­ஷாத் தெரி­வித்­தார்.