கூட்டம் குறைவு கொண்டாட்டம் நிறைவு

கூட்டம் குறைவு கொண்டாட்டம் நிறைவு

3 mins read
f67aa47d-f611-4153-ae91-00575a52ccf4
-
multi-img1 of 3

மாதங்கி இளங்­கோ­வன்

நோன்­புப் பெரு­நாளை ஒட்டி, இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பின் மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளது கேலாங் சந்தை. சிங்­கப்­பூ­ரில் புனித ரம­லான் மாதத்­தின் கொண்­டாட்ட உணர்வை முஸ்­லிம்­களும் முஸ்­லிம் அல்­லா­த­வர்­களும் ஒரு­சே­ரப் பெறு­வ­தற்கு கேலாங் சந்­தை­யும் ஒரு கார­ணம் என்றே சொல்­ல­லாம்.

ஒவ்­வோர் ஆண்­டும் பாரம்­ப­ரிய உண­வு­வ­கை­க­ளு­டன் வித்­தி­யா­ச­மான உண­வு­வ­கை­க­ளை­யும் பானங்­க­ளை­யும் இங்கே வாங்­கிச் சுவைத்து மகி­ழ­லாம்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முன்­னிட்டு கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நோன்­புப் பெரு­நா­ளுக்­கான கேலாங் சந்தை திறக்­கப்­ப­ட­வில்லை. இந்த ஆண்டு குறை­வான எண்­ணிக்­கை­யில்­தான் கடை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கூட்­ட­மும் குறை­வா­கவே காணப்­ப­டு­கிறது.

ரம­லான் மாதத்­தின் தொடக்க நாளில் மக்­கள் பெரு­ம­ள­வில் வரு­கை­ய­ளித்­தி­ருந்­தா­லும் நாள­டை­வில் நிலைமை மாறி­விட்­ட­தா­கக் கூறு­கின்­ற­னர் கடைக்­கா­ரர்­கள்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கேலாங் சந்­தைக்­குத் திரும்­பி­யது மகிழ்ச்சி அளித்­தா­லும் பெரி­தாக இலா­பம் ஈட்ட முடி­ய­வில்லை என்ற கவ­லையை அவர்­கள் பகிர்ந்­த­னர். ஏறக்­கு­றைய 21,000 வெள்ளி வாட­கைக் கட்­ட­ணம் செலுத்­தும் இவர்­கள் சில ஆயி­ரம் வெள்ளி இலா­பம் ஈட்­டி­னால்­கூட நிம்­ம­தி­யாக இருக்­கும் என்­கி­றார்­கள்.

இந்­தி­யப் பல­கா­ரங்­களை விற்­கும் கடை­களும் இங்கு இருக்­கின்­றன. வெவ்­வேறு பாணி உண­வு­வகை­க­ளின் தனிப்­பட்ட அம்­சங்­க­ளைக் கலந்து புது பாணி­யில் விற்க முனைந்­துள்­ள­னர் கடைக்­கா­ரர்­கள்.

பல்­லாண்­டா­கக் கடை நடத்­தி­னா­லும் மக்­களை ஈர்க்க ஏதா­வது புதிது புதி­தாக அறி­மு­கம் செய்­வதே சிறந்த உத்தி என்­பது கடைக்­கா­ரர்­க­ளின் கருத்து.

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு மேல் கேலாங் சந்­தை­யில் வடை­கள் விற்­கும் 'த ஒரி­ஜி­னல் வடை' கடை­யின் முன் மற்ற உண­வுக் கடை­க­ளை­விட அதி­கக் கூட்­டத்­தைக் காண­மு­டிந்­தது. சுவை­யான வித­வி­த­மான வடை­க­ளைக் குறைந்த விலைக்கு விற்­கிறது 'த ஒரி­ஜி­னல் வடை'. வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் குடும்­பத்­தா­ருக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் நிறைய வடை­களை வாங்­கிச் செல்­வ­தைக் காண­மு­டி­கிறது.

தமிழ்த் திரைப் பாடல்­க­ளை­யும் இந்தி பாடல்­க­ளை­யும் கேட்­டுக்­கொண்டே வடை­க­ளை­யும் மற்ற தின்­பண்­டங்­க­ளை­யும் பொறித்து மக்­க­ளுக்கு விற்­பனை செய்­வது மிஸ்­டர் வடைக் கடை­யின் சிறப்­பம்­சம். நீண்ட நேரம் வேலை­யில் ஈடு­பட்­டா­லும் முகத்­தில் புன்­னகை மாறா­மல் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் நன்கு உரை­யா­டிக்­கொண்டே தங்­கள் வர்த்­த­கத்­தைச் செய்­கின்­ற­னர் இதன் உரி­மை­யா­ளர்­கள்.

'ஃபூடிடி­யூட்' நிறு­வ­னத்­தின் 'பிரெ­ஃபல்ஸ்' இந்த ஆண்­டின் புது வரவு. பிராட்டா, 'வேஃப்ஃபல்ஸ்' இரண்­டின் கலவை இது. ஐந்து வித்­தி­யா­ச­மான சுவை­களில் விற்­பனை ஆகிறது 'பிரெ­ஃபல்ஸ்'. பிராட்டா செய்­யப் பயன்­ப­டுத்­தும் மாவை 'வேஃபல்ஸ்' தயா­ரிக்­கும் கரு­வி­யில் ஊற்­றி­னால் சுவை­யான 'பிரெ­ஃபல்ஸ்' தயார். இந்­தப் புது­மை­யான உண­வு­வகை வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கவ­ரும் என்ற நம்­பிக்­கை­யில் உரு­வாக்­கி­ய­தா­கக் கூறி­னர் ஃபூடிடி­யூட்­டின் பணி­யா­ளர்­கள். குலா மெலாக்கா 'பிரெ­ஃபல்ஸ்', டிர­ஃப்­ஃபல் சீஸ் 'பிரெ­ஃபல்ஸ்', சில்லி கிராப்'பிரெ­ஃபல்ஸ்' போன்­ற­வற்றை 9.90 வெள்ளி முதல் 15.90 வெள்ளி வரை இக்­க­டை­யில் வாங்­கிச் சுவைக்­க­லாம்.

உள்­ளூர்ச் சுவை­யின் வழி இளை­யர்­களை ஈர்க்­கத் திட்­ட­மிட்­ட­தா­கக் கூறி­னார் 'பிரெ­ஃப்­ஃபல்ஸ்' கடை­யின் உரி­மை­யா­ளர்.

"கேலாங் சந்­தை­யில் ஒவ்­வோர் ஆண்­டும் எங்­கள் நிறு­வ­னம் புது­மை­யான உண­வு­வ­கை­களை அறி­மு­கம் செய்ய முயற்சி செய்­கின்­றது. அப்­ப­டிப்­பட்ட ஒரு முயற்­சி­தான் 'பிரெ­ஃபல்ஸ்'. நாவிற்கு இனிப்­பும் கார­மும் கலந்த சுவை­யைத் தரும் வகை­யில் வெவ்­வேறு வகை­களில் 'பிரெ­ஃபல்சைத்' தயா­ரித்து மக்­களை எங்­கள் கடைக்கு வர­வ­ழைக்க விரும்­பி­னோம்," என்­றார் அவர்.

கேலாங் சந்­தைக்கு ஒவ்­வோர் ஆண்­டும் தம் குடும்­பத்­தோடு வரு­வது வழக்­கம் என்­றார் 18 வயது சிவ­கு­மார் மோனா. இந்த ஆண்டு உண­வு­வ­கை­க­ளின் விலை சற்று அதி­கம் என்­றா­லும், குடும்­பத்­தா­ரு­டன் இங்கு செல­வ­ழித்த நேரம் நினை­வில் நிற்­கக்­கூ­டி­யது. பிற­கும் நினைத்து மகிழ வாய்ப்பு அளிக்­கும் இந்­தச் சந்­தைக்கு வந்­த­தில் மிக்க மகிழ்ச்சி என்­றார் அவர்.

இங்கு பல­ரை­யும் கவ­ரும் கடை­களில் ஒன்று துருக்­கிய பனிக்­கூழ் கடை. இதில் வேலை­செய்­யும் 38 வயது ஆண்­டனி சேவி­யர், சிறு பிள்­ளை­க­ளுக்கு சிரிப்­பூட்­டும் வித்­தை­க­ளைக் காட்டி அவர்­க­ளுக்­குப் பனிக்­கூழை விற்­கி­றார். பிள்­ளை­க­ளின் முகம் மலர்­வ­தைப் பார்ப்­ப­தில் ஏற்­படும் மன­நி­றைவு இவ­ருக்கு உற்­சா­க­மூட்­டு­கிறது. நாள் முழுக்க வியர்வை சிந்தி வேலை செய்­தா­லும் பிள்­ளை­க­ளின் மகிழ்ச்சி அதைப் போக்­கி­வி­டும் என்­கி­றார் இவர்.

படங்கள்: திமத்தி டேவிட்