ஹாலிவுட் வானில் மின்னும் தெற்காசிய தாரகைகள்

ஹாலிவுட் வானில் மின்னும் தெற்காசிய தாரகைகள்

2 mins read
db535553-7548-493c-9ed1-5941854b0d09
-
multi-img1 of 3

'ஹாலி­வுட்!' இந்­தப் பெயரை அறி­யா­த­வர்­களே உல­கில் இல்லை என்று­கூட சொல்­ல­லாம். ஒரு­வ­கை­யில் திரைத்­து­றை­யி­னர் பல­ருக்­கும் ஏக்­கம் விளை­விக்­கும் கள­மும்­கூட. அண்மை ஆண்­டு­களில் தெற்கு ஆசிய நாடு­க­ளைச் சேர்ந்­தோர் இங்கே தடம் பதித்து வரு­கின்­ற­னர்.

இந்­திய நடிகை பிரி­யங்கா சோப்ரா, பாகிஸ்­தா­னிய நகைச்­சுவைக் கலை­ஞர் குமைல் நஞ்­சி­யானி போன்ற பெயர்­கள் இன்று அமெ­ரிக்­கர்­க­ளி­டையே பிர­ப­லம்.

தற்­போது அடுத்த தலை­முறை தெற்­கா­சி­யக் கலை­ஞர்­களும் ஹாலி­வுட்­டில் ஒளி­வீ­சு­வ­தைக் காண­முடிகிறது.

பிரிட்­ட­னைச் சேர்ந்த சிமோன் ஆஷ்லி, சரித்ரா சந்­தி­ரன் இரு­வ­ரும் 'நெட்­ஃபி­ளிக்ஸ்' வாயி­லாக ஒளி­ப­ரப்­பா­கும் ஆங்­கில நிகழ்ச்சி மூலம் முத்­திரை பதித்­துள்­ள­னர்.

சிமோன் நடித்­துள்ள 'த லிட்­டில் மெர்­மய்ட்' விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கிறது. சரித்ரா அடுத்து 'பில்லோ டாக்' எனும் கேலிச்­சித்­திர இணை­யத் தொட­ரில் நடித்­துள்­ளார். இரு­வ­ருமே தமிழ்க் குடும்­பங்­க­ளின் வழித் தோன்­றல்­கள்.

கன­டா­வைச் சேர்ந்த மைத்­ரேயி ராம­கி­ருஷ்­ணன் 15,000க்கும் மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரர்­களை வெற்றி­கண்டு 'நெவர் ஹேவ் ஐ எவர்' எனும் நகைச்­சு­வைத் தொட­ரில் வாய்ப்பு பெற்­றார்.

மற்­ற­வர்­கள் உச்­ச­ரிக்க வசதி என்று கருதி தனது பெயரை மாற்­றப் போவ­தில்லை என்­ப­தில் இவர் உறு­தி­யாக இருக்­கி­றார்.

அவந்­திகா வண்­ட­னாபு ஹாலி­வுட் மட்­டு­மின்றி தெலுங்கு வெள்­ளித் திரை­யி­லும் பெயர் பெற்­ற­வர்.

இன்­னும் சில நாள்­களில் இவர் நடித்­துள்ள 'சீனி­யர் இயர்' எனும் நெட்­ஃபி­ளிக்ஸ் நகைச்­சு­வைத் தொடர் வெளி­யா­க­வி­ருக்­கிறது.

'ஸ்டே­ஷன் லெவன்' புகழ் ஹிமேஷ் பட்­டேல் 11 ஆண்­டு­க­ளுக்கு மேல் அனு­ப­வம் உள்ள சிறந்த நடி­கர்.

இசை, நாட­கத்­துக்­கான கல்­லூ­ரிப் படிப்­பைப் பாதி­யில் விட்­டு­விட்டு நடிப்­புத் தாகத்­து­டன் திரை­யு­ல­கில் நுழைந்து சாதித்­துள்­ளார் விவேக் கல்ரா.

'லிஃப்ட்' எனும் நெட்­ஃபி­ளிக்ஸ் நகைச்­சுவை நாட­கத் தொடர் விரை­வில் திரைக்கு வரக் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

சென்­னை­யில் பிறந்த அஞ்­சனா வாசன், நான்கு வயது முதல் சிங்­கப்­பூ­ரில் வளர்ந்­த­வர். பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் லண்­ட­னுக்­குக் குடி­பெ­யர்ந்­தார்.

"எனது இத­யம் சிங்­கப்­பூ­ரில் இருக்­கிறது," என்று பெரு­மை­யு­டன் கூறும் இவர் முத­லில் ஸ்பை­டர் மேன் உள்­ளிட்ட படங்­க­ளி­லும், தொலைக்­காட்­சித் தொடர்­க­ளி­லும் சிறிய வேடங்­களில் தோன்­றி­னா­லும் அடுத்­த­டுத்து இவ­ரது திரைப் பய­ணம் உய­ரத்­துக்கு இட்­டுச் செல்­வ­தா­கவே அமைந்­துள்­ளது.

கன­டா­வைச் சேர்ந்த இமான் வெல்­லனி மார்­வல் ஸ்டூ­டி­யோஸ் தயா­ரிக்­கும் மிஸ் மார்­வல் தொலைக்­காட்­சித் தொட­ரில் அசா­தா­ரண சக்தி உடைய முதல் முஸ்­லிம் கதா­பாத்­தி­ரம் எனும் பெரு­மை­யைப் பெற­வி­ருக்­கி­றார்.

'ஐஎம்­டிபி பேஜ்' எனும் இணை­யத் திரைப்­பட தர­வு­த­ளப் பக்­கங்­கள் இவர்­க­ளைப் பற்­றிய விரி­வான தக­வல்­களை ரசி­கர்­க­ளுக்கு வழங்­கு­கின்­றன. ஹாலி­வுட்­டில் திறன்­காட்ட முனைந்­துள்ள இத்­த­கை­யோ­ருக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்­பா­ன­தா­கவே அமைந்­துள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.