செரிமானத்தை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

செரிமானத்தை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

2 mins read

வயிற்­றில் ஏற்­படும் செரி­மா­னக் கோளாறு மருத்­து­வத் துறை­யில் டிஸ்­பெப்­சியா (dyspepsia) என அழைக்­கப்­ப­டு­கிறது.

சரி­யாகச் சாப்­பி­டா­த­வர்­களுக்கும் அளவுக்கும் மேல் சாப்பிடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. வயிறு உப்­பு­ச­மாக உணர்ந்­தாலோ, வயிறு வலித்­தாலோ இதுவும் செரிமானக் கோளாறாக இருக்­க­லாம்.

கார­மான உணவு சாப்­பிட்­ட­வுடன் படுப்­பது, மன இறுக்­கம், பதற்­றம், மது அருந்­து­தல், புகை­பி­டித்­தல் ஆகி­யவை செரி­மா­னக் கோளாறு ஏற்­படுவதற்கான கார­ணிக­ளாக உள்­ளன.

இரைப்­பைப் புற்­று­நோய், இரைப்பை அழற்சி, குடற்­புண், பித்­தப்­பைக் கல், கணைய அழற்சி ஆகிய நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் செரி­மானக் கோளாறு ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

அறி­கு­றி­கள்

குமட்­டிக்­கொண்டு வரு­தல், வாய் துர்­நாற்­றம், வயிற்று வலி, நெஞ்­செ­ரிச்­சல், வாய் கசத்தல், வயிற்­றுப்­போக்கு, புளித்த ஏப்­பம், பசி­யின்மை உள்­ளிட்­டவை இதன் அறி­கு­றி­கள்.

வீட்டு வைத்­தி­யம்

இஞ்சி: உண­வு­டன் இஞ்சி சேர்த்­துக்கொள்­ள­லாம் அல்­லது இஞ்சி தேநீர் அருந்­த­லாம். இஞ்­சி­யில் ஆன்டி ஆக்­சி­டண்ட் இருப்­ப­தால் செரிமானப் பிரச்சினையை குணமாக்கும். இஞ்­சி­யில் வலி, அழற்­சியை குணப்­ப­டுத்­தும் தன்மையும் உள்­ளது. ஆனால், குடல்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப் படி சேர்த்துக்கொள்ளலாம்.

எலு­மிச்சை: சாப்­பிட்ட பிறகு எலு­மிச்சை சாறு குடித்­தால் வயிற்­றெ­ரிச்­சல், வயிற்று வலி குறை­யும்.

புதினா: குடல் தசை­களை மிரு­து­வாக்க புதினா உத­வு­கிறது. சாப்­பிட்ட பிறகு புதினா தேநீர் பரு­க­லாம்.

நெல்­லிக்­காய்: தினமும் ஒரு­முறை நெல்­லிக்­காய் சாப்­பிட்டு வர கோளாறு நீங்­கும்.

இல­வங்­கப்­பட்டை: ஆன்டி ஆக்­சி­டண்ட் இருப்­ப­தால் செரிமானக் கோளாற்றை குணப்­ப­டுத்த உத­வும். இதனை தினமும் 2-3 முறை தேநீராக அருந்­த­லாம்.

பெருஞ்­சீ­ர­கம்: இரைப்பை நீர் சுரக்க பெருஞ்­சீ­ர­கம் உத­வும். பெருஞ்­சீ­ர­கத்தை நீரு­டன் கலந்து சாப்­பி­ட­லாம்.

தேன்: பாக்­டீ­ரி­யாக்­கள் உற்­பத்­தியை தடுப்­ப­தன் மூலம் அஜீ­ர­ணத்தை குணப்­ப­டுத்த தேன் உத­வுகிறது.