அரிய செல்­லப் பிரா­ணி­கள்

அரிய செல்­லப் பிரா­ணி­கள்

2 mins read
c5f0894a-a257-4202-8a8c-3a57bc704bd6
ஐசேக் கோ 'சவுத் அமெ­ரிக்­கன் லங்­ஃபிஷ்' மீன். படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3
Google News Preferred Icon

தாம்­சன் சாலை­யில் முற்­றி­லும் அழிந்து போகக்­கூ­டிய அபா­யம் உள்ள அரிய வகை கொக்கை தூக்­கி­ய­படி ஒரு மாது சென்­று­கொண்­டி­ருந்த காட்சி பதி­வான காணொளி சென்ற மாதம் இணை­யத்­தில் அதி­கம் பகி­ரப்­பட்­டது. அது பலரை ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­யது.

அந்த மாதின் குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரு­டன் 'சிஎன்ஏ' செய்தி நிறு­வ­னம் பேசி­யது. அந்­தக் கொக்கு தனது குடும்­பத்­தின் செல்­லப் பிராணி என்று அவர் தெரி­வித்­தார்.

முற்­றி­லும் அழிந்து போகக்­கூ­டிய பல விலங்­கு­களை வளர்ப்­ப­தற்கு சிங்­கப்­பூ­ரில் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­த­கைய சில விலங்­கு­களை வளர்க்க உரி­மம் தேவை.

எனி­னும், சில அரிய விலங்­கு­களை வளர்க்க உரி­மம் தேவை­யில்லை. அத்­த­கைய விலங்­கு­களை சிங்­கப்­பூ­ரில் சிலர் வைத்­தி­ருக்­கின்­ற­னர்.

இவற்­றில் சில முற்­றி­லும் அழிந்­து­போ­கும் அபா­யம் உள்­ளவை, வேறு சில வீடு­களில் அதி­கம் வளர்க்­கப்­ப­டா­தவை.

ஜேடன் லோ எனும் 18 வயது ஆட­வ­ருக்­குத் தான் வளர்க்­கும் அரிய வகை ஆமை­க­ளு­டன் ஒரே மேசை­யில் சேர்ந்து உண­வ­ருந்­தும் பழக்­கம் உள்­ளது.

'மலே­யன் பாக்ஸ் டர்­டல்ஸ்' எனும் முற்­றி­லும் அழிந்து போகக்­கூ­டிய அபா­யம் உள்ள ஆமை­களை திரு லோ வளர்க்­கி­றார். ஒரு 'மலே­யன் பாக்ஸ்' ஆமையை வாங்க பல நூறு வெள்ளி ஆக­லாம்.

பொது­வாக எறும்­பு­க­ளைப் பலர் தொந்­த­ர­வா­கக் கரு­து­வர். ஆனால் 23 வயது ஏஞ்­ச­லின் சியூ எனும் பெண் எறும்­பு­களை வளர்க்­கி­றார்.

அவர் முத­லில் வளர்க்க ஆரம்­பித்­தது 'குவீன் ஏன்ட்' எனும் ராணி எறும்பு.

'ஜஸ்ட் ஏன்ட்ஸ்', 'ஓடி­எஃப் அக்­கு­வே­ரி­யம் ஃபார்ம்', 'தெட் அக்­கு­வே­ரி­யம் சாங்கி' ஆகிய கடை­களில் எறும்­பு­களை வாங்­க­லாம்.

மற்ற விலங்­கு­களை வேட்­டை­யாடி உண்­ணும் மீன்­களை 15 உயர்­நி­லைப் பள்ளி மாண­வ­ரான ஐசேக் கோ வளர்க்­கி­றார். அவற்­றில் ஒன்று 'சவுத் அமெ­ரிக்­கன் லங்­ஃபிஷ்' எனும் மீன்.

மற்ற மீன்­க­ளைப் போல் அல்­லா­மல் இந்த மீன் தனது நுரை­யீரல் வழி­யாக சுவா­சிக்­கும். ஓர் இளம் 'லங்­ஃபிஷ்' மீனின் விலை சுமார் 18 வெள்ளி. பொது­வாக டிசம்­பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இது பிர­ப­ல­மாக இருக்­கும்.