வெற்றிக் கொடியை பறக்கவிட்ட சாந்தி பெரேரா, பிரையன்

1 mins read
9742b028-c4ce-4bc7-b346-256439b086a5
வெற்றிக் களிப்பில் சிங்கப்பூர் கொடியுடன் கொண்டாடிய மார்க் பிரையன் லூயிஸ் (இடது), சாந்தி பெரேரா.படம்: சிஎம்ஜி -

ஹனோய்: ஓட்­டப்­பந்­தய நட்­சத்­

தி­ரங்­க­ளான சாந்தி பெரே­ரா­வும் மார்க் பிரை­யன் லூயி­சும் புயல் வேகத்­தில் ஓடி, பதக்­கம் வென்று சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை

சேர்த்­துள்­ள­னர்.

வியட்­னா­மில் நடை­பெற்று வரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில், மக­ளி­ருக்­கான 200 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் ஏற்­கெ­னவே தங்­கம் வென்ற சாந்தி, நேற்று 100 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்து வெள்ளி வென்­றார்.

25 வயது சாந்தி மின்­னல் வேகத்­தில் ஓடி 11.62 வினா­டி­களில்

போட்­டியை முடித்து நூலி­ழை­யில் தங்­கத்­தைத் தவ­ற­விட்­டார்.

பிலிப்­பீன்­சின் கேலா ரிச்­சர்ட்­சன் 11.60 வினா­டி­களில் பந்­த­யத்தை முடித்து முத­லி­டம் பிடித்­தார்.

தாய்­லாந்து வீராங்­கனை வெண்­க­லம் வென்­றார்.

தென்­கி­ழக்­காசிய விளை­யாட்­டு­ கள் 100 மீட்­டர் பந்­த­யத்­தில் சாந்தி வெள்­ளிப் பதக்­கம் வென்­றி­ருப்­பது இதுவே முதல்­முறை. இதற்கு முன்பு அவர் தொடர்ந்து மூன்று முறை வெண்­க­லம் வென்­றார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிங்கப்பூரின் மார்க் பிரையன் லூயிஸ் வெண்கலம் வென்றார்.

அவர் 10.56 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார். தகுதிச் சுற்றில் இதைவிட வேகமாக ஓடி 10.48 வினாடிகளில் முடித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற சிங்கப்பூர் குழுவில் பிரையன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.