தங்கப் பதக்கத்துக்கு வைத்த குறி தப்பவில்லை

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் துப்­பாக்­கி சுடும் போட்­டி­யில் சிங்­கப்­பூர் வீராங்­கனை டே சியூ ஹோங் தங்­கம் வென்­றுள்­ளார். மக­ளி­ருக்­கான 25 மீட்­டர் ‘பிஸ்­டல்’ துப்­பாக்கி சுடும் போட்­டி­யில் 34 புள்­ளி­கள் குவித்த மற்ற போட்­டி­யா­ளர்­களை அவர் பின்­னுக்­குத் தள்­ளி­னார். சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மற்­றொரு வீராங்­க­னை­யான டியோ ஷுன் சியே நான்­கா­வது இடத்­தைப் பிடித்து பதக்­கம் வெல்­லத் தவ­றி­னார்.

2015, 2017ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் வெள்­ளிப் பதக்­கம் வென்ற டே, முதல்­

மு­றை­யாக தங்­கப் பதக்­கம் வென்­றுள்­ளார்.

இவ்­வாண்டு வியட்­னா­மில் நடை­பெற்று வரும் போட்­டி­யில் சிங்­கப்­பூ­ரின் துப்­பாக்­கி சுடும் குழு இது­வரை நான்கு பதக்­கங்­களை வென்­றுள்­ளது. நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற 10 மீட்­டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் சிங்­கப்­பூர் வெள்ளி வென்­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் முதல்­மு­றை­யா­கக் கள­மி­றங்­கிய 17 வயது லய­னல் வோங் வெள்ளி வென்­றார்.

சகோ­த­ரி­க­ளான எடேல் டானும் ஃபெர்னெல் டானும் சிங்­கப்­பூ­ருக்­காக வெண்­க­லம் வென்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!