படகுவழித்தல் போட்டியில் சிங்கப்பூருக்கு தங்கம்

படகுவழித்தல் போட்டியில் சிங்கப்பூருக்கு தங்கம்

1 mins read
203c7fea-5b7b-4ee8-b34d-6bc8f1e291e1
ஹை போங் நகரில் படகுப் போட்டி. (படம்: thanhphohaiphong.gov.vn) -

ஹனோய்: வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் படகுவழித்தல் போட்டியில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 2015ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய விளையாட்டுகள் சிங்கப்பூரில் நடைபெற்றபோது படகுவழித்தல் போட்டியில் நாட்டுக்காகத் தங்கம் வென்று பெருமை சேர்த்த லூக்கஸ் டியோ மீண்டும் வாகை சூடியுள்ளார்.

ஹனோய் நகரில் நேற்று நடைபெற்ற 1,000 மீட்டர் படகுவழித்தல் போட்டிக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 31 வயது டியோ வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

இரண்டாவது இடத்தில் பந்தயத்தை முடித்த இந்தோனீசியா வெள்ளிப் பதக்கத்தையும் மூன்றாவது இடத்தைப் பிடித்த தாய்லாந்து வெண்கலத்தையும் வென்றன.