தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளி வென்று வரலாறு படைத்த வாள்வீச்சு மகளிர்

1 mins read
6d4feacc-565b-4406-9b67-a9a069478067
கடுமையாகப் போராடி சாதித்த வீராங்கனைகள். படம்: சிஎம்ஜி -

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் இது­வரை இல்­லாத அள­வுக்கு வாள்­வீச்­சுப் போட்­டி­யின் கடைசி நாளன்று சிங்­கப்­பூர் அணி மிகச் சிறப்­

பா­கச் செயல்­பட்டு பதக்­கங்­களை அள்ளியது.

ஆண்­க­ளுக்­கான குழுப் பிரி­வில் தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக சிங்­கப்­பூர் நேற்று தங்­கப் பதக்­கம் வென்­றது. மக­ளிர் குழுப் பிரி­வி­லும் பெண்­கள் சக்­கைப்­போடு போட்­ட­னர். முதல்­மு­றை­யாக வெள்ளி வென்ற வீராங்­க­னைகள் வர­லாற்­றில் இடம்­பெற்­ற­னர்.

அபா­ர­மா­கச் செயல்­பட்டு வெற்­றிக் கனி­யைப் பறித்த சிங்­கப்­பூர் குழு, இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் ஆறு தங்­கப் பதக்­கங்­கள், நான்கு வெள்­ளிப் பதக்­கங்­கள், ஐந்து வெண்­க­லப் பதக்­கங்­கள் ஆகி­ய­வற்றை வென்று சாதனை படைத்­துள்­ளது.

நேற்று நடை­பெற்ற ஆண்­கள் பிரிவு இறுதி ஆட்­டத்­தில் மலே­சி­யக் குழுவை 45-28 எனும் புள்­ளிக் கணக்­கில் சிங்­கப்­பூ­ரின் ஜானத்­தன் ஆவ் இயோங், ஜொவேல் சியூ, கிய­ரன் லோக், மேத்யூ லிம் ஆகி­யோர் வீழ்த்தி தங்­கத்­தைத் தட்­டிச் சென்­ற­னர். மக­ளி­ருக்­கான இறுதி ஆட்­டத்­தில் போட்­டியை ஏற்று நடத்­தும் வியட்­னா­மி­டம் சிங்­கப்­பூர் குழு 45-39 எனும் புள்­ளிக் கணக்­கில் மிகக் கடு­மை­யா­கப் போரா­டித் தோற்­றது.