சிங்கப்பூர் பொது விருது பூப்
பந்துப் போட்டியை நேரில் கண்டு மகிழ விரும்புவோர் அதற்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம். அனைத்து ஆட்டங்களையும் சென்று பார்ப்பதற்கான நுழைவுச் சீட்டுகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும்.
தனித்தனி நாள்களுக்கான நுழைவுச்சீட்டுகளையும் ரசிகர்கள் வாங்கலாம்.
பெரியவர்களுக்கான நுழைவுச் சீட்டின் விலை $30. சிறுவர்
களுக்கான நுழைவுச்சீட்டின் விலை $5.
இப்போட்டி வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும். முன்னாள் உலக வெற்றியாளரும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி. சிந்து பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இப்போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
நுழைவுச்சீட்டுகளுக்கான விற்பனை ஜூன் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும். கூடுதல் தகவலுக்கு ticketmaster.sg/activity/detail/22_sgopen2022 எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

