இறுதிவரை மேன்சிட்டிக்கு நெருக்குதலைத் தரும் லிவர்பூல்

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்டி வெற்­றி­யாளர் பட்­டத்தை எந்­தக் குழு தட்­டிச்­செல்­லும் என்­ப­தைப் பற்றி அறிந்­து­கொள்ள போட்­டி­யின் இறுதி நாள் வரை காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் லிவர்­பூ­லும் சவுத்­ஹேம்­ட­னும் மோதின. இதில் லிவர்­பூல் 2-1 எனும் கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

இத­னால் லீக் பட்­டி­ய­லில் 90 புள்­ளி­க­ளு­டன் முன்­னிலை வகிக்­கும் மான்­செஸ்­டர் சிட்­டி­யை­விட ஒரு புள்ளி குறை­வா­கப் பெற்று லிவர்­பூல் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. எனவே இறுதி ஆட்­டத்­தில் என்ன வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம்.

தனது கடைசி ஆட்­டத்­தில் ஆஸ்­டன் வில்­லாவை சிட்டி வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று சந்­திக்­கிறது. அதே நாளன்று உல்வ்ஸ் குழு­வும் லிவர்­பூ­லும் மோது­

கின்­றன.

வில்­லாவை சிட்டி தோற்­கடித்­தால் வெற்­றி­யா­ளர் பட்­டத்தை அது கைப்பற்றுவது உறுதி.

ஆனால் சிட்டி சம­நிலை கண்­டாலோ அல்­லது தோல்வி அடைந்­தாலோ, லிவர்­பூல் அதன் கடைசி ஆட்­டத்­தில் வெற்றி பெறும்

பட்­சத்­தில் லீக் பட்­டம் லிவர்­பூ­லுக்­குச் சொந்­த­மா­கி­வி­டும்.

லீக் பட்டத்துக்குக் குறிவைத்து இறுதி வரை போராட இருப்பதாக லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இரண்டாம் நிலை லீக் போட்டியிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு முன்னேறும் குழுவை நிர்ணயிக்கும் 'பிளே ஆஃப்' சுற்றுக்கு நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவும் ஹட்டர்ஸ்ஃபீல்டு டவுனும் தகுதி பெற்றுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஷெஃபீல்டு யுனைடெட் குழுவை பெனால்டி 'ஷுட்அவுட்'டில் ஃபாரஸ்ட் தோற்கடித்தது.

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்குத் திரும்பும் வாய்ப்பை அது நெருங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!