முந்திரிக்கொட்டையல்ல, முட்டைதான் இது!

இந்­தி­யா­வின் கர்­நா­டக மாநி­லம், தட்­சிண கன்­னடா மாவட்­டம், லைலா எனும் சிற்­றூ­ரைச் சேர்ந்த ஒரு கோழி, முந்­தி­ரிக்­கொட்டை வடி­வில் முட்­டை­யிட்டு, ஊரையே வியப்­பில் ஆழ்த்தி வரு­கிறது.

முந்­திரி வடி­வி­லான முட்­டை­களை முத­லில் கண்­ட­தும் அந்­தக் கோழிக்­குக் கிறுக்­குப் பிடித்­து­விட்­டது என்று தாம் நினைத்­த­தா­கக் கூறி­னார் அதன் உரி­மை­யா­ளர் பிர­சாந்த்.

அண்­மை­யில்­தான் இந்­தக் கோழி இப்­படி முந்­திரி வடி­வில் முட்­டை­யி­டத் தொடங்­கி­ய­தா­க­வும் அதன்­பின் இக்­கோ­ழி­யிட்ட பத்து முட்­டை­களும் இதே வடி­வில் இருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

முதல்­நாள் இத்­த­கைய முட்­டை­யைக் கண்­ட­தும் அவ­ரின் குடும்­பத்­தி­னர் வியந்­து­போ­யி­னர். இருப்­பி­னும், எது­வும் செய்­யாது இன்­னும் சில நாள்­கள் காத்­தி­ருக்­க­லாம் என்று அவர்­கள் முடி­வு­செய்­த­னர்.

ஆனால், இக்­கோழி இப்­படி முந்­தி­ரிக்­கொட்டை வடி­வில் முட்­டை­யி­டு­வது தொடர்ந்­தது. இத­னைத் தொடர்ந்து, இந்­தக் கறுப்பு­நி­றக் கோழி­யைக் காண­வும் அது இட்ட முட்­டை­க­ளைக் காண­வும் ஊரார் திரு பிர­சாந்­தின் வீட்­டிற்­குப் படை­யெ­டுத்­த­படி உள்­ள­ன­ராம்.

“தொடர்ந்து மூன்று நாள்­க­ளாக முந்­திரி வடி­வில் முட்­டை­யிட்­ட­தைக் கண்­ட­தும், கோழி­யைக் கால்­நடை மருத்­து­வ­ரி­டம் எடுத்­துச் சென்­றோம். கோழி­யின் கருப்­பை­யில் ஏதே­னும் பிரச்­சினை இருக்­க­லாம் அல்­லது அதன் இனப்­பெ­ருக்க உறுப்­பில் புழுக்­கள் இருக்­க­லாம்,” என்­றார் திரு பிர­சாந்த்.

எத­னால் இந்­தப் பிரச்­சினை என்­பது இன்­னும் உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை. அது தெரிந்­த­பின், தேவைப்­ப­ட்டால் கோழிக்­குச் சிகிச்சை அளிப்பது என்று திரு பிரசாந்தின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இது­போல, கடந்த மார்ச் மாதம் ஆந்­திர மாநி­லத்­தைச் சேர்ந்த சத்தி பாபு எனும் மளி­கைக் கடைக்­கா­ரர் வளர்த்­து­வ­ரும் கோழி மாங்­காய் வடி­வில் முட்­டை­யிட்­டது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!