நலமான வாழ்க்கைக்கு

நலமான வாழ்க்கைக்கு

1 mins read

நமது அன்றாட வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும்.

 தண்ணீர் நிறைய குடியுங்கள்.

 காலை உணவை ஓர் அரசர் போலவும் மதிய உணவை ஓர் இளவரசர் போலவும் இரவு உணவை யாசகம் கேட்பவரைப் போலவும் உண்ணவேண்டும்.

 இயற்கை உணவு, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்த்து விடுங்கள்.

 உடற்பயிற்சி, பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

நிறைய புத்தகங்கள் படியுங்கள்.

 குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

 குறைந்தது 10 முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

 உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடா தீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

 எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.