ஒரு மாத காலம் நடக்கும் மரபுடைமை விழா

மோன­லிசா

சிங்­கப்­பூர் ஏர்­லைன்­ஸின் 75ஆம் ஆண்டு நிறைவு, செந்­தோசா மேம்­பாட்டு நிறு­வ­னத்­தின் 50ஆம் ஆண்டு நிறைவு, மெர்­ல­யன் சிலை­யின் 50ஆம் ஆண்டு நிறைவு, கரை­யோ­ரப் பூங்­கா­வின் 10ஆம் ஆண்டு நிறைவு ஆகிய அனைத்­தை­யும் ஒன்றிணைத்து இவ்­வாண்டின் சிங்­கப்­பூர் மர­பு­டைமை விழா கொண்­டாடப்படுகிறது.

விழா­வின் சிறப்­பம்­சங்­க­ளாக ஆர்ச்­சர்ட் சாலை­யி­லும் சேஞ் அலீ­யி­லும் இருந்த அப்­பாஸ் பல்­பொ­ருள் அங்­காடி, தேனீப் பண்­ணை­யான பீ அமேஸ்ட் கார்­ட­னின் நிறு­வ­னர்­கள் தங்­க­ளு­டைய இயற்கை மர­பு­டை­மை சார்ந்த பய­ணத்­தை­யும் அதில் தங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளித்த விஷ­யங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்­ளும் காணொளி இடம்­பெ­று­கிறது.

பய­ணக் கதை­களில் சிங்­கப்­பூ­ரின் சித்­தி­ரிப்­பை­யும் அதில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பார்­வை­யை­யும் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் கருத்­து­க­ளை­யும் பிர­தி­ப­லிக்­கும் திரைப்­ப­டம் ஒன்­றும் இடம்­பெ­று­கிறது.

விரைவு ரயில்­களில் பய­ணம் செய்தபடியே வர­லாற்றை அறிந்து­கொள்ளும் வகையில் ரயில்­க­ளின் நுழை­வா­யில்­களில் ஒட்டப்பட்டுள்ள சிங்­கப்­பூர் பற்றிய அரிய தக­வல்­கள் நிறைந்த 'ரைட் அண்ட் டிஸ்­க­வர்' எனும் முயற்­சி­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தனித்­து­வ­மான பொழுது­போக்­கு­களைச் சித்­தி­ரிக்­கும் வண்­ணம் ஒரு காணொளி­யும் இடம்­பெறுகின்றன.

அந்­தக் காணொ­ளி­யில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் தீவிர ரசி­கர் ஒரு­வர், 40 ஆண்­டு­கா­ல­மாக சேக­ரித்த நூற்றுக்கும் மேற்­பட்ட எஸ்­ஐ­ஏ­யின் நினை­வுப் பொருள்­க­ளின் தொகுப்­பும் உள்­ளது.

மே மாதம் 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை நடை­பெ­றும் இவ்­வி­ழா­வில் நாகூர் தர்கா இந்­திய முஸ்­லிம் மர­பு­டைமை நிலை­யம் உட்­பட 80க்கும் மேற்­பட்ட சமூக பங்­கா­ளி­களும் கலந்­து­கொள்­கின்­ற­ன.

இவ்­வாண்­டின் கருப்­பொ­ரு­ளான 'சிங்­கப்­பூ­ரின் பயண வர­லா­றும் இயற்கை மர­பு­டை­மை­யும்' என்­பதை பறை­சாற்­றும் 120க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் வாழ்­வி­யல் முறை சார்ந்த அனு­ப­வங்­களும் தாவ­ரங்­கள், விலங்­கி­னங்­க­ளின் அரிய அம்­சங்­களை வெளிக்­கொ­ண­ரும் கலா­சார பாரம்­ பரி­யத் தடங்­கள், பயி­ல­ரங்­கு­கள், காணொளி ஆவ­ணப்­ப­டங்­கள், சுற்­றுலாக்­கள், கண்­காட்­சி­கள் போன்­ற­வை­யும் இடம்­பெ­று­கின்­றன.

நான்கு வார இறு­தி­ நாள்களில் நடந்து வரும் இவ்­வி­ழா­வில் பெரும்­பா­லான நிகழ்ச்­சி­கள் நேரடியாகவும் சில நிகழ்ச்­சி­கள் இணை­யம் வழி­யும் நடை­பெ­று­கின்­றன.

விழா­ பற்றிக் குறிப்பிட்ட விழாவின் இயக்­கு­நர் டேவிட் சியூ, "கடந்த இரு ஆண்­டு­க­ளை­விட இந்த ஆண்டு பெரும்­பா­லான நிகழ்­வு­களை நேரடியாக நடத்­து­வ­தில் பெரு­ம­கிழ்ச்சி கொள்­கி­றோம்.

"நிகழ்ச்­சி­யின் ஆத­ர­வா­ளர்­கள், பங்­கு­தா­ரர்­கள், உறுப்­பி­னர்­க­ளின் உத­வி­யு­டன் சிங்­கப்­பூ­ரின் வர­லாறு மற்­றும் மர­பு­டைமை அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­களை வெளிக்­கொ­ணர்­வதை குறிக்­கோ­ளா­கக் கொண்­டுள்­ளோம்," என்று கூறி­னார்.

கடந்த வாரம் பூன் லே டிரைவ், மவுண்ட் ஃபேபர் மலை ஆகிய இயற்­கை­யோடு இயைந்த சுற்­று­லாக்­கள், ரங்­கோலிப் போட்டி, ஆர்ட் ஆஃப் ரன்­டாய் என்­னும் பல்­துறை கலை அரங்­கேற்­றம் போன்ற நிகழ்­வு­கள் நடந்­தன.

விழா­வின் கடைசி வார­மான இந்த வாரத்­தில் வரும் 29ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரில் மரங்­க­ளின் பெயர்­களில் உள்ள தெருக்­க­ளைப் பற்­றிய மெய்­நிகர் சுற்­றுலா, தெலுக் ஆயர் வர­லாற்று வட்­டா­ரத்­தில் நடைபெறும் நடைப்­ப­ய­ணம், சாங்கி விமான நிலைய ஊழி­யர்­கள் பற்­றி­யும் சிங்­கப்­பூர் பாரம்­ப­ரி­யத்தை பற்­றி­யும் விளக்­கும் ஃபேஸ்புக் காணொ­ளி­கள், கெபுன் ராசா சாயாங் பூன் லே பகு­தி­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளின் தோட்­டப் பரா­ம­ரிப்பு போன்ற நிகழ்­வு­களும் இடம்­பெ­று­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!