தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் மேம்படும் ஆயுள், ஆரோக்கியம்

தரை­யில் அமர்ந்து சாப்­பிட்­ட­பி­றகு, யாரு­டைய உத­வி­யும் இன்றி, தரை­யில் கையை ஊன்­றா­மல் எழு­ப­வர்­களுக்கு ஆயுள் மேம்படுவதாக ஓர் ஆராய்ச்சியில் கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றார்­கள்.

முந்தைய தலைமுறையினர் ஆரோக்­கி­ய­மாய் வாழ அவர்­கள் சாப்­பிட்ட சத்­தான உண­வு­டன் சாப்­பிட்ட முறை­யும் முக்கிய கார­ண­மாக இருந்­தது.

நமது மூதா­தை­யர்­க­ளி­டம் தரை­யில் சம்­ம­ணங்­கால் போட்டு சாப்­பி­டு­வதே பழக்­க­மாக இருந்­தது. ஆனால் இப்­பொ­ழுது அது மாறி­விட்­டது.

பெரும்­பா­லான வீடு­களில் சாப்­பாட்டு மேசை­களில் அமர்ந்து சாப்­பி­டு­கின்­ற­னர். பல உண­வகங்­களில் மட்­டு­மின்றி திரு­ம­ணங்­க­ளி­லும் பஃபே விருந்து என்று நின்­று­கொண்டு சாப்­பி­டும் பழக்­கம் பரவி வருகிறது.

இரண்டு கால்­க­ளை­யும் மடக்கி அமர்­வது 'சுகா­ச­னம்' எனப்­படும் யோகப் பயிற்­சி­யா­கும். இந்த நிலை செரி­மானத்­திற்கு உத­வு­கிறது. தரை­யில் அமர்ந்து சாப்­பி­டும்­போது உணவு எடுப்­ப­தற்காக நாம் முன்­னால் தலை­யைக் குனிவோம். உணவு எடுத்­த­பி­றகு பின்­னால் வரு­வோம். இந்­தச் செயல்­பாட்­டால் வயிற்­றில் உள்ள தசை­கள் செயல்­பட்டு நல்ல செரி­மா­னத்­திற்கு வழி­வகுக்­கிறது.

தரை­யில் அம­ரும்­போது 'வேகஸ்' எனும் நரம்பு (மூளைக்கு தக­வல் அனுப்­பும் நரம்பு) சுறு­சு­றுப்­பா­கச் செயல்­ப­டு­கிறது. இத­னால் வயிறு நிறைந்­த­வு­டன் உட­ன­டி­யாக தக­வலை மூளைக்கு அனுப்­பு­வ­தால் அதி­கம் சாப்­பி­டு­வது தவிர்க்­கப்­பட்டு உடல் எடை சீரா­கிறது.

இப்படி தரை­யில் அமர்­ந்து சாப்பிடு வது மற்றோர் ஆச­ன­மான பத்­மா­ச­னத்­து­டனும் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்­றுப் பகுதியைச் சுற்­றி­யுள்ள தசை­கள் அனைத்­தும் விரி­வ­டைந்து உடம்பு வலி­களைக் குறைக்க உதவுகிறது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது.

இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுவதால் குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது என்கின்றனர் மருத்து வர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!