சிறப்புத் தேவை பிள்ளைகள் படைத்த நிகழ்ச்சி

சிறப்புத் தேவை பிள்ளைகள் படைத்த நிகழ்ச்சி

2 mins read

சிறப்புத் தேவையுள்ள பிள்ளைகளின் ஆடல், பாடல், கேளிக்கை படைப்புகளை மக்களுக்குக் கொண்டு வந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரடியாக அரங்கேறிய 'எம்பவரிங் வித் லவ்' நிகழ்ச்சி.

ரிப்பப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியின் அகோரா மண்டபத்தில் 800க்கும் மேற்பட்டோர் கண்டு களித்த இந்நிகழ்வினை இந்தியாவில் இயங்கும் 'டிஃபரன்ட் ஆர்ட் சென்டரும்' சிங்கப்பூர் மலையாளி சங்கமும் இணைந்து வழங்கியது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் கலையும் அன்பும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது என்பதைப் பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு நடந்தேறி யது. மதியிறுக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பயிற்சி மூலம் உத்வேகமூட்டும் நோக்கம் கொண்டுள்ளது, திரு கோபிநாத் முதுகாட்டால் 2019ல் நிறுவப்பட்ட 'டிஃபரன்ட் ஆர்ட் சென்டர்' அமைப்பு.

கேரளாவின் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் இந்நிகழ்வில் கலைஞர்களாக பரிணமித்தனர்.

சிங்கப்பூரில் உதவி தேவைப்படுவோருக்கு கூடுதல் ஆதரவளிக்கும் நோக்கத்துடன், டிஃபரன்ட் ஆர்ட் சென்டர் இன்டர்நேஷனல் (சிங்கப்பூர்) அமைப்பின் உருவாக்கம் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

"இதுபோன்ற முயற்சிகளை சிங்கப்பூரில் நிறுவுவது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாற்றுத் திறனாளிகளின் திறன்களைக் கொண்டாடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன," என்றார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவா.

வரும் 2030ஆம் ஆண்டில் துணைபுரியும் பெருந்திட்டமானது மாற்றுத் திறனாளி களுக்குக் கலை, மரபுடைமை நடவடிக்கை களை எட்டக்கூடியதாக மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் திரு எரிக் சுவா கூறினார்.

இத்தகைய முயற்சிகளின் வாயிலாக முன்னேற்றம் காண, பொது, தனியார் துறைகளில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

டிஃபரன்ட் ஆர்ட் சென்டரின் மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு கலை வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதிலிருந்து, ஒவ்வொருவருக்கும் ஆர்வமுள்ள கலையில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களது படைப்பு களுக்கான தளமும் கொடுக்கப்படுகின்றன.

"ஊக்கமூட்டும் சிங்கப்பூர் மக்களின் முன், ஆரம்பத்தில் வாக்கியங்கள் அமைக்க சிரமப் பட்ட இந்தப் பிள்ளைகள் முழுமூச்சாக படைத்த தில் மிக்க மகிழ்ச்சி," என்றார் நிறுவனர்

திரு கோபிநாத்.