உதவிக்கரம் நீட்டும் இலக்குடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

உதவிக்கரம் நீட்டும் இலக்குடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

3 mins read
65f200df-3793-4fa3-a75a-a94cd04f4901
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் (இடது) மற்றும் முனீஸ்வரன் சமூக சேவை மையத்தின் இயக்குநர் திருமதி மதுபாலா பாலகிருஷ்ணா. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைப் பார்வையிடும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவா மற்றும் முனீஸ்வரன் சமூக சேவை மையத்தின் தலைவர் திரு மா. பா. கணேசன். படம்: சிண்டா -

யுகேஷ் கண்ணன்

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கமும் முனீஸ்வரன் சமூக சேவை மையமும் உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் திருமண மண்டபத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.

முனீஸ்வரன் சேவை மையத்தை முனீஸ்வரன் ஆலயம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியது. ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் இலக்கு.

இந்த மையம் தற்போது மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவது, மக்களுக்கு இலவச மருத்துவ, சட்ட ஆலோசனைகள் வழங்குவது, சிறையிலுள்ள இந்தியர்களுக்கு ஆலோசனை உரைகள் நடத்துவது எனப் பல உதவிகளைப் புரிந்து வருகிறது.

தமது குறிக்கோளை எட்டவும் தகுதியான இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்ற வேட்கையை கொண்டுள்ளதாலும் இம்மையம் சிண்டாவுடன் இணைந்து செயல்பட முனைந்ததாக முனீஸ்வரன் சமூக சேவை மையத்தின் தலைவரான, திரு மா. பா. கணேசன், 69, தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இரு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படவும் இரு அமைப்புகளுக்கு இடையே உள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரிதும் உதவுமென அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

இதன் மூலம், உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்க முடியுமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.

"ஆல­யங்­கள், பள்­ளி­வா­சல்­கள் மற்­றும் தேவா­ல­யங்­க­ளு­டன் இணைந்து சிண்டா பல ஆண்­டு­

க­ளா­கப் பணி­பு­ரிந்து வந்­தா­லும், ஓர் ஆல­யத்­தின் சமூக சேவை மையத்­து­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டு­வது இதுவே முதல்­முறை. இதற்கு கார­ணம், இதன்மூலம் உதவி தேவைப்­படும் இந்­தி­யர்­

க­ளுக்கு மேலும் விரி­வான மற்­றும் ஆழ­மான உத­வி­களை வழங்க முடி­யும் என்­பதே ஆகும்." என

சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு

ராஜேந்­திரன் கூறி­னார்.

இவ்வாறு இணைந்து பணி புரிவதால் இந்திய சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் மூல காரணங் களைக் கண்டறிந்து அவற்றை தீர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவ்வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய குடியிருப்பாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் உதவிகளைவிட மேலும் எத்தகைய உதவிகளையும் சேவைகளையும் வழங்க முடியுமென இரு அமைப்புகளும் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டப்­பட்ட நிகழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா கலந்­து­கொண்­டார். இந்த ஒப்­பந்­தம் அர­சின் 'பல உத­வும் கரங்­கள்' (Many Helping Hands) திட்டத்தின் ஒரு முக்­கிய அங்­க­மென்­றும் இது போல பல அமைப்­பு­கள்

ஒன்­றி­ணைந்து சேவை­

யாற்­று­வது வர­வேற்கத்தக்கது என்றும் திரு சுவா கூறி­னார்.

இவ்­வாறு இரு அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து செய­லாற்­று­வது பல நன்­மை­களைத் தரும் என­வும் அவர் தெரி­வித்தார்.

இரு அமைப்பு­களும் இட வச­தி­க­ளை­யும் பொருள் வச­தி­க­ளை­யும் பகிர்ந்துகொள்ள இவ்­வொப்­பந்­தம் பெரி­தும் உத­வு­மென அவர் தெரி­வித்­தார்.

இத­னால், இந்­தி­யச் சமூகத்துக்குத் தேவையான உதவி கிடைக்கும் வாய்ப்பு அதி­க­ரிக்­கும் என திரு சுவா தெரிவித்தார்.