21 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆக டின் ஜிங்யாவ் தயார்

21 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆக டின் ஜிங்யாவ் தயார்

1 mins read

அண்­மை­யில் நடந்து முடிந்த தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூ­ருக்­காக இரண்டு பதக்­கங்­களை வென்ற சது­ரங்க வீரர் டின் ஜின்­யாவ் 21 வய­தி­லேயே கிராண்ட்­மாஸ்­டர் பட்­டம் பெற இருக்­கி­றார்.

இம்­மா­தம் 23ஆம் தேதி­யி

­லி­ருந்து 29ஆம் தேதி வரை நடை­பெற்ற ஹனோய் ஜிஎம் சது­ரங்­கப் போட்­டி­யில் சக்­கைபோடு போட்ட டின் சிங்­கப்­பூ­ரின் ஐந்­தா­வது கிராண்ட்­மாஸ்­ட­ரா­க­வும் ஆக இளைய கிராண்ட்­மாஸ்­ட­ரா­க­வும் உய­ர இருக்­கி­றார்.

இப்­போட்­டி­யின் முதல் ஏழு சுற்­று­களில் ஆறு சுற்­று­களை டின் கைப்பற்றினார். நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் பிலிப்­பீன்ஸ் வீரர் பாவ்லோ பெர்­சா­மி­னா­வு­டன் அவர் சம­நிலை கண்­டார். சிறப்­பா­கச் செயல்­பட்ட டின் கிராண்ட்­மாஸ்­டர் நிலைக்கு உய­ரும் தகு­தி­யைப் பெற்­று­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சதுரங்கத்தில் முத்திரை பதித்துள்ள டின் ஜின்யாவ்.

படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்