ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி

ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி

1 mins read

ஜகார்த்தா: 11வது ஆசியக் கிண்ண ஹாக்கி போட்டி

இந்­தோ­னீ­சியத் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் நடைபெற்று வரு­கிறது.

எட்டு அணி­கள் பங்­கேற்ற இப்போட்­டி­யில் முதல் சுற்று முடி­வில் 'ஏ' பிரி­வில் ஜப்­பான், நடப்பு வெற்றியாளர் இந்­தியா, 'பி' பிரி­வில் மலே­சியா, தென்­கொ­ரியா ஆகிய அணி­கள் சூப்­பர் 4 எனப்­படும் இரண்டாவது சுற்­றுக்கு முன்­னே­றின.

இந்த சுற்­றில் ஒவ்­வோர் அணி­யும் தங்­க­ளுக்­குள் தலா ஒருமுறை மோத வேண்­டும்.

இதன் முடி­வில் முதல் இரண்டு இடங்­களைப் பிடிக்­கும் அணி­கள் இறு­தி ஆட்டத்துக்கு தகுதி பெறும்.

இந்­நி­லை­யில், சூப்­பர் 4 சுற்­றின் முத­லா­வது ஆட்­டத்­தில் பிரேந்­திர லாக்ரா தலை­மை­யி­லான இந்­திய அணி ஜப்­பானை நேற்று முன்தினம் எதிர்­கொண்­டது.

இதில் 2-1 என்ற கோல் கணக்­கில் ஜப்­பானை வீழ்த்தி இந்­தியா அபார வெற்றி பெற்­றது. இந்­திய வீரர்­கள் மஞ்­சித் சிங், பவன் ராஜ்­பர் ஆகி­யோர் தலா ஒரு கோல் போட்டனர்.