பாரிஸ்: பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் மைக்கல் யெமர் ஆகியோர் மோதினர். இதில் 6-2, 6-2, 6-1, எனும் நேர்செட்டுகளில் வெற்றி பெற்ற சிட்சிபாஸ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றோர் போட்டியில் டென்னிஸ் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள டேனில் மெட்வடேவ், மியோமிர் கெக்மனோவிச்சை எதிர்கொண்டார். இந்தப்
போட்டியில், 6-2, 6-4, 6-2 என மெட்வடேவ் வெற்றி பெற்றார்.

