'கோழிக்குப் பதில் புரதம் நிறைந்த இந்த உணவுகளை உண்ணலாம்'

'கோழிக்குப் பதில் புரதம் நிறைந்த இந்த உணவுகளை உண்ணலாம்'

2 mins read
9ce66235-98bf-4628-90d1-8eec174346a4
மீன், சோயா, பால் பொருள்களில் அதிகப் புரதச் சத்து இருப்பதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். படம்: இணையம் -

கடை­களில் பல வித­மான இறைச்­சி­கள் கிடைத்­தா­லும் பெரும்­பா­லா­னோ­ருக்­குக் கோழி இறைச்சி என்­றால் மிக­வும் பிடிக்­கும். சில­ருக்கோ கோழி இறைச்சி இல்­லா­மல் ஒரு வேளை உண­வு­கூட உண்ண முடி­யாது.

இன்­னும் சில காலம் மலே­சி­யா­வில் இருந்து கோழி இறைச்சி இறக்­கு­மதி செய்யப்படாது என்­ப­தால் சந்­தை­யில் இதன் விலை ஏறக்­கூ­டும். இது சில­ருக்­குச் சிர­ம­மாக இருக்­கக்­கூ­டும்.

கோழி இறைச்­சி­யைப் புர­தச் சத்­துக்­கா­கவே விரும்பி உண்­ப­தா­கக் கூறு­வோ­ரும் உண்டு.

வய­தா­னோர், உடற்­கட்­ட­ழ­கர்­கள் போன்­றோ­ருக்­குக் கோழி இறைச்சி விநி­யோ­கம் குறை­வது மாற்று உணவு குறித்த கவ­லை­யைத் தோற்­று­விக்­கும். ஆனால் இத்­த­கை­யோர் கவ­லைப்­பட வேண்­டாம் என்­கின்­ற­னர் ஊட்­டச் சத்து வல்­லு­நர்­கள்.

கொழுப்பு நீக்­கப்­பட்ட பன்றி இறைச்சி கோழி இறைச்­சி­யைப் போன்றே அதி­கப் புர­த­மும் குறை­வான கொழுப்­பும் கொண்­டது என்று இவர்­கள் கூறு­கின்­ற­னர். ஊட்­டச் சத்து விகி­த­மும் இரண்­டி­லும் சமம் என்று கூறப்­பட்­டது.

மாட்டு இறைச்சி, வாத்து இறைச்சி போன்­ற­வற்­றை­யும் உண்­ண­லாம். இவ்­வி­ரண்­டி­லும் கோழி இறைச்­சி­யைக் காட்­டி­லும் இரும்­புச் சத்து அதி­கம் என்று வல்­லு­நர்­கள் கூறி­னர்.

தோலை நீக்­கி­விட்டு, கொழுப்பு குறை­வான இறைச்சி வகை­களை அள­வோடு உண்­ப­தன் மூலம் பல­ன­டை­ய­லாம் என்று அவர்­கள் ஆலோ­சனை சொன்­னார்­கள்.

இவை மட்­டு­மின்றி மீன் வகை­க­ளி­லும் மிகச் சிறந்த புர­தச் சத்து காணப்­படு­வ­தா­க­வும் மீன்­களை உண்­ப­தன் மூலம் உட­லுக்­குத் தேவை­யான புர­தச் சத்தை எளி­தா­கப் பெற­மு­டி­யும் என்­ப­தை­யும் வல்­லு­நர்­கள் சுட்­டி­னர்.

முட்டை, பால், தயிர், பாலா­டைக் கட்டி போன்­ற­வை­யும் அதி­கப் புர­தச் சத்து கொண்ட உண­வுப் பொருள்­கள்.

சோயா­வி­லி­ருந்து தயா­ரிக்­கப்­படும் உண­வுப் பொருள்­கள், பருப்பு வகை­கள் ஆகி­ய­வற்­றி­லும் புர­தச் சத்து மிகுந்­துள்­ளது. உதா­ர­ணத்­திற்கு கொண்­டைக் கடலை, நிலக் கடலை போன்றவை ஆரோக்கியமான முறையில் புரதச் சத்தைப் பெற உதவக்கூடியவை என்று கூறப்பட்டது.