பெருந்தேவியின் கவிதைப் பயிலரங்கு

1 mins read

ஆசிய புத்­தாக்க எழுத்­து­முறை திட்­டத்­தின் கீழ் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் சியெனா கல்­லூ­ரி துணை பேரா­சி­ரி­யர் முனை­வர் பெருந்­தேவி நடத்­தும் கவி­தைப் பயி­ல­ரங்­கு­, உரைகள் இணை­யத்­தி­லும், நேரடி நிகழ்­வா­க­வும் நடக்­கின்­றன.

'சம­கா­லத் தமிழ்க் கவிதை' என்ற தலைப்­பி­லான பயி­ல­ரங்­கில் கலந்­து­கொள்­வோர், கவி­தை­யில் எவ்­வாறு சொற்­சிக்­க­னத்­தைக் கடைப்­பி­டிப்­பது, தேய்­வ­ழக்­கு­களைத் தவிர்ப்­பது, எவ்­வ­கை­களில் திருத்தி எழு­து­வது ஆகி­ய­வற்­றை­ அறிந்துகொள்ளலாம்.

'லிரிக்­கல்' கவிதை வடி­வம், எதிர்­க­விதை ஆகி­யவை குறித்­தும் அறிந்து கொள்­ள­லாம்.

ஜூன், ஜூலை மாதங்­களில் இடம்­பெ­ற­வி­ருக்­கும் இப்­ப­யி­ல­ரங்கு தேசிய நூல­கத்­தில் காலை முதல் மதி­யம்­ வரை நடை­பெ­றும்.

பெரி­யோ­ரும் மாண­வர்­களும் முறையே $150, $60 கட்­ட­ணம் செலுத்தி ஆறு நாள் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொள்­ள­லாம். 16 வய­துக்கு மேலுள்ள மாண­வர்­க­ளுக்கு இல­வச அனு­மதி உண்டு.

பதிவு செய்­வ­தற்­கான இறுதி நாள், ஜூன் 6.

மேல் விவ­ரங்­க­ளுக்கு: https://blogs.ntu.edu.sg/acwp/2021/07/07/perundevi-ps1a/

இன்று இடம்பெறும் பெருந்­தேவி­யின் கவிதை குறித்த உரை­யைக் கேட்க விரும்புவோர் பதிவு செய்க: http://bit.ly/acwp-ps7