பெண்ணின் மாதவிடாய் அனுபவத்தைப் பற்றிய 'ஸ்ட்ராபெர்ரி கேர்ல்ஸ்'

பெண்ணின் மாதவிடாய் அனுபவத்தைப் பற்றிய 'ஸ்ட்ராபெர்ரி கேர்ல்ஸ்'

2 mins read
e67b9b95-ae31-422a-958e-78dc2f9d6b89
(இடமிருந்து) பாட்டி, தாய், மகள் என்று மூன்று தலைமுறையினராக நடிக்கும் திருவாட்டி பத்மா சாகரம், திருவாட்டி ஐஸ்வரியா நாயர், சஞ்சலா. படம்: கிறிஸ்தஃபர் சீ -

ஹர்­ஷிதா பாலாஜி

இந்­தியப் பண்­பாட்­டில், ஒரு பதின்ம வயதுப் பெண்­ணுக்கு முதல்­மு­றை­யாக மாத­வி­டாய் ஏற்­ப­டு­வது பல குடும்­பங்­களில் விழா­வாகக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

குறிப்­பாக, தமி­ழர் பண்­பாட்­டில் அதைச் 'சடங்கு' அல்லது 'மஞ்­சள் நீராட்டு விழா' என்று அழைப்­ப­து உண்டு. இதுவே 'ஸ்ட்­ரா­பெர்ரி கேர்ல்ஸ்' என்ற நாட­கத்­தின் மையப் பொரு­ளா­கும்.

நாட­கத்­தில் மொத்­தம் மூன்று கதா­பாத்­தி­ரங்­கள் இடம்­பெ­று­கின்­ற­னர். 13 வயது விமிஷா, தாயார் சோனியா, பாட்டி கல்­யாணி. விமிஷா­வுக்கு முதல்­மு­றை­யாக மாத­விடாய் ஏற்­பட்­ட­போது, அதை எவ்வாறு அவர்­கள் மூவ­ரும் சமா­ளித்­தார்­கள் என்­பதைச் சுற்றி கதை நகர்­கிறது.

அதே நேரத்­தில், திரு­ம­ணம், மண­விலக்கு ஆகிய விவ­கா­ரங்­கள் குறித்து இந்த நாட­கத்­தில் பேசப்­படு­கிறது.

"முதன்­மு­த­லில் எனக்கு மாத­வி­டாய் ஏற்­பட்­ட­போது அது 'ஸ்ட்ரா­பெர்ரி' தயிர் என்று நினைத்­தேன். அத­னா­லேயே நாட­கத்­துக்கு 'ஸ்ட்­ரா­பெர்ரி கேர்ல்ஸ்' என்­கிற பெயரை வைத்­தேன்.

அத்­து­டன், பெரும்­பாலான வீடு­களில் வெளிப்­ப­டை­யாக மாத­வி­டாய் என்று சொல்ல மாட்­டார்­கள், வேறு ஏதா­வது வார்த்­தையை வைத்தே அதை மறை­மு­க­மாக குறிப்­பி­டு­வார்­கள்.

"ஆகை­யால், நாட­கத்­தின் முதல் பாதி முழு­வ­தும் மாத­வி­டா­யைக் குறிக்க 'ஸ்ட்­ரா­பெரி' என்ற வார்த்தை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது," என்­றார் நாடக இயக்­கு­நர் அஷ்வாணி அஷ்­வத், 31.

மாத­வி­டாய் தொடர்­பான பழக்­க­வ­ழக்­கங்­களும் மனப்­பான்­மை­யும் மூன்று தலை­மு­றை­யி­னரைப் பிர­தி­நி­திக்­கும் மூன்று கதா­பாத்­தி­ரங்­கள் மூலம் சித்­திரிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், மாத­வி­டாய் தொடர்­பான புரா­ணக்­க­தை­க­ளைச் சித்திரிக்க நாட­கத்­தில் வச­னங்­களோடு நட­ன­மும் இசை­யும் இடம்­பெ­று­கின்­றன.

விமி­ஷா­வின் பாட்டி கல்­யா­ணி­யாக நடித்­துள்ள திரு­வாட்டி பத்மா சாக­ரம் மிக­வும் யதார்த்­த­மான நடிப்பை இந்த நாட­கத்­தில் வெளிப்­படுத்­தி­னார்.

குறிப்­பாக, பாட்டி கல்­யா­ணிக்கு மாத­வி­டாய் ஏற்­பட்ட காலத்­தில் கேள்வி எது­வும் கேட்­கா­மல் மூடநம்பிக்­கை­யைக் கொண்­டி­ருந்­தார்.

அது­பற்றி தம் பேத்தி கேட்­கும்­போது அதற்­குப் பதி­ல­ளிக்க முடி­யா­மல் திண­று­வ­தும் தம் மகளின் திரு­மண வாழ்­வின் சங்­க­ட­மான நிலை­மை­யைப் புரிந்­து­கொண்டு ஒரு தாயாக அவர் வருத்­தப்­ப­டு­வதும் பாராட்­டுக்­கு­ரி­யது.

'சடங்கு' என்­னும் விழாவை மூட­நம்­பிக்கை என்று சொல்லி கொச்­சைப்­ப­டுத்­தா­மல் அனைத்து கோணங்­க­ளி­லி­ருந்­தும் அலசி ஆராய்ந்­ததே நாட­கத்­தின் மாபெரும் வெற்றி.

இருப்­பி­னும், நாட­கம் ஆங்­கி­லத்­தில் இடம்­பெற்­ற­தால் அதில் கூறப்­படும் கருத்­து­கள் பார்­வை­யா­ளர்­களை, குறிப்­பாக மற்ற இனத்­த­வரை எவ்­வ­ளவு தூரம் சென்­று­சே­ரும் என்ற கேள்வி எழு­கிறது.

எனி­னும், இக்­க­ருத்தை மற்ற இனத்­த­வ­ரி­ட­மும் கொண்­டு­சேர்க்க வேண்­டும் என்ற இயக்­கு­ந­ரின் நோக்­கம் பாராட்­டுக்­கு­ரி­யது.

"தொடர்ந்து இது­போன்ற படைப்­பு­களை உரு­வாக்­க­வேண்டும் என்­பதே எனது விருப்­பம். மாத­வி­டா­யின்­போது ஒரு பெண் 'சுத்­த­மில்லை' என்று சொல்­வதை நிறுத்­த­வேண்­டும், பல­ரும் அதைப் பற்றி வெளிப்­ப­டை­யாகப் பேச­வேண்­டும்," என்­றும் அஷ்­வாணி அஷ்­வத் கூறி­னார்.