புற்றுநோய்க்கும் வாழ்க்கைமுறைக்கும் தொடர்பு உண்டு

2 mins read
6ba41cb4-8d1e-49ac-af0b-bb426ec20f6d
காரம் அதிகம் விரும்பிச் சாப்பிடுவோருக்குப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. படம்: பிக்சபே -

பலர் கார­மான உணவை விரும்பி உண்­கி­றோம். ஆனால் அதி­கக் கார­மான உண­வைச் சாப்­பி­டு­வ­தால் புற்­று­நோய் உரு­வா­க­லாம் என்று எத்­தனை பேருக்­குத் தெரி­யும்?

தின­மும் நம்மை அறி­யா­ம­லேயே நாம் பின்­பற்­றும் ஒரு­சில பழக்­க­வழக்­கங்­களும் நம் வாழ்க்­கை­முறை­யும் புற்­று­நோய் வரக் கார­ண­மாக அமைந்­து­வி­ட­லாம். 10 இந்­தி­யர்­களில் ஒரு­வர் தம் வாழ்­நா­ளில் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­கி­றார் என்­றும் 15 பேரில் ஒரு­வர் புற்­று­நோ­யால் இறக்­கி­றார் என்­றும் உலக சுகா­தார அமைப்­பின் ஆய்­வ­றிக்கை குறிப்­பி­டு­கிறது.

ஆரோக்­கி­ய­மற்ற வாழ்க்­கை­முறை­யைக் காலஞ்­சென்ற பிறகு கைவி­டு­வ­தை­விட இளமை முதல் விழிப்­பு­ணர்­வு­டன் இருக்க ஒரு சில அம்­சங்­களில் கவ­னம் செலுத்­த­லாம்.

கார­மான, சூடான உணவு: அதிக சூடோ காரமோ உள்ள உண­வைச் சாப்­பி­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும். அவற்­றைச் சாப்­பி­டு­வ­தால் நுரை­யீ­ரல், வாய், வயிற்­றுப்­பகுதி ஆகி­ய­வற்­றில் புற்­று­நோய் உரு­வா­கக்­கூ­டும்.

இந்­தி­யர்­கள் தங்­கள் உண­வில் பயன்­ப­டுத்­தும் மசா­லாக்­களும் அதி­க­மா­கச் சேர்க்­கப்­ப­டும்­போது புற்­று­நோய் உரு­வா­வ­தற்­கான சாத்­தி­யத்தை அதி­க­மாக்­க­லாம் என்று ஆய்­வு­கள்­வழி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

நார்ச்­சத்து: நார்ச்­சத்­துள்ள உண­வு­வ­கை­க­ளைத் தவிர்ப்­ப­தா­லும் அதைக் குறை­வாக உட்­கொள்­வ­தா­லும் பெருங்­கு­டல் புற்­று­நோய் வர­லாம்.

சிவப்பு இறைச்­சியை அள­வுக்கு அதி­க­மாக உட்­கொள்­வ­தைத் தவிர்த்து, நார்ச்­சத்து அதி­க­முள்ள பழங்­கள், காய்­கறி வகை­கள், முழு தானி­யங்­கள், பருப்பு வகை­க­ளைத் தெரி­வு­செய்­வது ஆரோக்­கிய உண­வு­மு­றைக்கு நல்ல அடித்­த­ள­மா­கும்.

அதிக சூரிய வெளிச்­சம்: உட­லில் சூரிய வெப்­பம் அதி­கம் படும்­போது உயி­ர­ணுக்­கள் பாதிக்­கப்­படும். அது சரு­மப் புற்­று­நோய் ஏற்­ப­டு­வ­தற்­கும் வழி வகுக்­க­லாம். குறிப்­பாக 18 வய­துக்கு உட்­பட்ட பிரி­வி­னர், வெயி­லின் தாக்­கத்­திற்கு உள்­ளா­வது பாதிப்பை அதி­கப்­படுத்தி­வி­டும். மதிய வேளை­யில் சூரிய ஒளி அதி­கம் உட­லில் படர்­வதைத் தவிர்ப்­பதே சிறப்பு.

செய­லற்ற தன்மை: உடல் அசைவு­கள் அதி­கம் இல்­லா­மல் ஒரு செய­லற்ற நிலை­யில் இருப்­பது, உட­லில் கொழுப்­புச்­சத்து அதி­க­ரிப்­பது, மது அருந்­து­வது, ஊட்­டச்­சத்து குறை­பாடு ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக புற்­று­நோய் ஏற்­ப­டு­வ­தற்கு 18% வாய்ப்பு இருப்­ப­தாக உலக புற்­று­நோய் ஆராய்ச்சி நிதி­ய­கம் கணித்­துள்­ளது.

உடற்­ப­யிற்சி செய்­யா­தது, அதி­கக் கொழுப்பு நிறைந்த உணவு வகை­களை உட்­கொள்­வது, நோய் எதிர்ப்­பு­சக்தி குறை­வது போன்ற கார­ணங்­க­ளால் பலர் புற்­று­நோய்க்கு ஆளா­கி­றார்­கள்.

புகை­யி­லைப் பொருள்­கள்: புகை­யி­லைப் பொருள்­க­ளால் ஒரு­வரின் ஆரோக்­கி­யம் பாதிக்­கப்­படு­வது பலர் அறிந்­ததே. சிக­ரெட்­டு­கள், வெற்­றி­லைப் பாக்கு, சுருட்டு, பீடி போன்­றவை நுரை­யீ­ர­லுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

அது தொண்டை வழி­யாக வயிற்றுப்­ப­கு­திக்­குச் சென்­ற­டைந்து புற்­று­நோய் ஏற்­படும் அபா­யத்தை அதி­க­ரிக்­கச்­செய்­யும்.

புகை­யி­லை­யால் குரல்­வளை, நுரை­யீ­ரல், உண­வுக்­கு­ழாய், சிறு­நீர்ப்பை, தொண்டை, சிறு­நீ­ர­கம், வயிறு, கல்­லீ­ரல், பெருங்­கு­டல், கணை­யம், மலக்­கு­டல், கருப்­பை­வாய் உள்­ளிட்ட பகு­தி­களில் புற்று­நோய் உரு­வா­க­லாம்.

தாய்ப்­பால்: தாய்ப்­பால் கொடுப்­பது மார்­ப­கப் புற்­று­நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான அபா­யத்தை 30% குறைக்­க­லாம் என்று ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

தாய்ப்­பால் கொடுக்­கா­மல் இருப்­பது அல்­லது மிக­வும் குறை­வா­கக் கொடுப்­பது புற்­று­நோய்க்கு வழி­வி­ட­லாம்.

எனவே, மார்­ப­கப் புற்­று­நோய் ஏற்­படும் அபா­யத்­தைக் குறைப்­ப­தற்­குப் பெண்­கள் தாய்ப்­பால் கொடுக்­கத் தயங்­க­வேண்­டாம் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

செய்தி: இணை­யம்