கவிஞர் இன்பாவின் நூல் வெளியீடு, 'திணைகள்' இணைய இதழ் துவக்கம்

கவிஞர் இன்பாவின் நூல் வெளியீடு, 'திணைகள்' இணைய இதழ் துவக்கம்

1 mins read
5b56e019-f7a1-451b-8d93-55839e1a6308
(இடமிருந்து) கவிஞர் இன்பா, முனைவர் சுப திண்ணப்பன்ஆகியோருடன் 'தமிழ்க்யூப்' நிறுவனர் ஏ.டி.பிள்ளை. செய்தி, படம்: இன்பா -

'லயாங் லயாங் குரு­வி­க­ளின் கீச்­சொ­லி­கள்' கவிதை நூல் குறித்த கலந்­து­ரை­யா­டல் அங்­க­மும் 'திணை­கள்' இணைய இத­ழின் துவக்க விழா­வும் கடந்த மாதம் 21ஆம் தேதி­யன்று தேசிய நூலக வாரி­யத்­தில் நடை­பெற்­றன.

சிங்­கப்­பூர் நிலம் தொடர்­பான இலக்­கிய ஆராய்ச்சி மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று எழுத்­தாளர் சித்­து­ராஜ் பொன்­ராஜ் அறை­கூ­வல் விடுத்­தார். முதல் நூலை முனை­வர் சுப.திண்­ணப்­பன் வெளி­யிட, 'தமிழ்க்­யூப்' கல்வி நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரான ஏ.டி.பிள்ளை அதைப் பெற்­றுக்­கொண்­டார். உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் சில­ரும் இன்­பா­வின் கவி­தை­களை வாசித்­துத் தங்­க­ளது கருத்­து­களைப் பகிர்ந்­து­கொண்­டார்­கள்.

'திணை­கள்' இணை­யத்­த­ளத்தை ஆசி­யப் புத்­தாக்க எழுத்­து­முறை திட்­டத்­தின் வருகை தரும் பேரா­சி­ரி­ய­ராக சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கும் கவி­ஞர் பெருந்­தேவி துவக்­கி­வைத்­தார். புலம்­பெ­யர் இலக்­கி­யத்­தின் அடை­யா­ளம், தொழில்­முறை, பழக்­க­வ­ழக்­கம், நிலம் சார்ந்த மக்­களின் வாழ்­வி­யல் பண்­பாடு, திணை சார்ந்த கோட்­பா­டு­கள் ஆகி­ய­வற்றை முன்­னி­லைப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் இணை­யத்­தளம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. திணை­க­ளைச் சார்ந்­த­வாறு நவீன இலக்­கி­யத்­து­டன் பய­ணிக்க விரும்­பும் படைப்­பா­ளர்­கள், கவிதை, மொழி­பெ­யர்ப்பு, கட்­டுரை, நேர்­காணல்­கள் என எந்த வகை­யி­லும் இதில் பங்­க­ளிக்­க­லாம் எனக் கவி­ஞர் இன்பா குறிப்­பிட்­டார்.

முதல் இணைய இத­ழில் நவீன இலக்­கி­யத்­தின் முக­மாக விளங்­கக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான படைப்­பா­ளர்­க­ளின் கவி­தை­களும் கட்­டு­ரை­களும் என 40 பதி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன. www.thinaigal.com என்ற முக­வ­ரி­யில் படைப்­பு­களை வாசிக்­க­லாம். படைப்­பு­களை editor@thinaigal.com என்ற மின்­னஞ்­சல் முக­வரிக்கும் அனுப்­ப­லாம்.