எஸ்பிளனேட் மேடையில் 'விலங்குப்பண்ணை' நாடகம்

1 mins read
42092663-1bf0-4b20-a162-343a82a679f2
விலங்குப்பண்ணை கதாபாத்திரங்கள். படம்: அகம் தியேட்டர் லேப் -

ஜார்ஜ் ஓர்­வெல் 1945ஆம் ஆண்­டில் எழு­திய 'எனி­மல் ஃபார்ம்' எனும் புகழ்­பெற்ற கதை­யைத் தமி­ழில் மேடை­யேற்ற உள்­ள­னர் சிங்­கப்­பூ­ரின் 'அகம் தியேட்­டர் லேப்' குழு­வி­னர்.

இவர்­க­ளின் படைப்பு, கலா­சா­ரப் பதக்­கம் பெற்ற பி.கிருஷ்­ண­னின் நாட­கத்தை மைய­மா­கக் கொண்­டது. பி.கிருஷ்­ண­னின் நாட­கத்­தின் ஒரு பகுதி 1971ல் வானொ­லி­யில் இரண்டு மணி­நேர நாட­க­மாக ஒலி­ப­ரப்­பப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

எனவே, நாட­கத்தை முழு­மை­யாக மேடை­யில் அரங்­கேற்­று­வது இதுவே முதல்­மு­றை­யா­கும்.

'அகம்' நிறு­வ­னர் சுப்­ர­ம­ணி­யம் கணேஷ், வச­னத்தை மாற்­றி­ய­மைத்த கார்த்­தி­கே­யன் சோம­சுந்தரம் ஆகி­யோர் நாட­கத்தை இயக்கி­யுள்­ள­னர்.

நாட­கம் இம்­மா­தம் 17, 18, 19 ஆகிய தேதி­களில் எஸ்­பி­ள­னேட் தியேட்­டர் ஸ்டூ­டி­யோ­வில் அரங்­கே­றும். $35 நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்கு 'சிஸ்­டிக்' நிறுவனத்தை அணு­க­லாம்.