கோடை கால பழமான லைச்சி பழம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்பழத்தை உண்பதால் சருமப் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல நன்மைகளைக் கொடுக்கவல்லது.
இந்த பழம் நீர்ச்சத்து நிறைந்தது. கோடை காலத்தில் அதிக வறட்சியாக இருக்கும்போது லைச்சி ஜூஸ் பருகுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
'பிங்க்' நிறத்தில் முட்டை
வடிவத்தில் இருக்கும் லைச்சி பழம் கோடை காலத்தில் அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும்
பழமாக உள்ளது. இதன் உட்புறத்தில் வெள்ளை ஜெல் போன்ற சதைப் பகுதி காணப்படுகிறது. சாப்பிட மிகவும் இனிப்பாக இருக்கும்.
வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் பி 1, பி 2, பி 3, பி 6 வரையிலான வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை இப்பழத்தில் நிறைந்துள்ளன.
சருமம்: லைச்சி பழத்தில்
வைட்டமின் சி உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை மேம்
படுத்தவும், வயதான அறிகுறிகள் தோன்றுவதை தடுக்கவும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பற்றாக்குறையால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் சிவந்து போதல் போன்ற
பிரச்சினைகளைத் தடுக்க பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்: சுவைமிகுந்த லைச்சி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பொட்டாசியம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் லைச்சி பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்: லைச்சி பழத்தில் அடங்கியுள்ள மிகவும் முக்கியமான மற்றொரு சத்து மெக்னீசியம் ஆகும். இது ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. மேலும் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைக்க உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவும்: லைச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. இது
மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளைத் தடுக்க உதவக்கூடியது.
நோயெதிர்ப்பு
சக்தியை
அதிகரிக்கும்:
உடலுக்கு எவ்வித நோயும் வராமல் தடுக்க நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு முக்கிய பங்காற்றி
வருகிறது. லைச்சி பழத்தை தினமும் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்
பதைக் காணலாம். ஏனெனில் லைச்சி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. அது அதிகமான நோய் எதிர்ப்பு
சக்தியை உருவாக்க உதவுகிறது. இந்தப் பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. உணவு உண்ட பிறகே
உண்ணவேண்டும்.

