முது­மை­யும் நோய் எதிர்ப்பு சக்­தி­யும்

முது­மை­யும் நோய் எதிர்ப்பு சக்­தி­யும்

2 mins read
5d684bde-ffe7-4bb6-9940-01355ee6f48f
-

வய­தா­ன­வர்­கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி

குறை­பா­ட்டு­டன் இருப்­பார்­கள் என்­ப­தில்லை. அது அவர்­க­ளின் மனம் மற்­றும் ஆரோக்­கி­யத்­தைப் பொறுத்­தது. நோய் எதிர்ப்பு சக்தி என்­பது உட­லுக்கு பாது­காப்புக் கவ­ச­மா­கும்.

பிறக்­கும் குழந்­தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று பல­வீ­ன­மாக இருக்­கும். தாய்ப்­பா­லும் ஊட்­டச்­சத்து உண­வு­களும் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­கப்­ப­டுத்­தும். அது­போ­லவே

வய­தா­கும்­போது மீண்­டும் நோய் எதிர்ப்பு சக்தி குறை­யத் தொடங்­கும்.

தன்­னம்­பிக்­கை­யும் ஊட்­டச்­சத்­து­மிக்க உண­வும்­தான் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­கும். கொரோனா நோய்த்­தொற்று நீடிக்­கும் இந்த கால­கட்­டத்­தில் வய­தா­ன­வர்­கள் உடல்­ந­லம் மற்­றும் நோய் எதிர்ப்பு சக்­திக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும்.

நோய் எதிர்ப்பு சக்­தியை மீட்­டெ­டுக்க:

தின­மும் மேற்­கொள்­ளும் வழக்­க­மான உடற்­ப­யிற்சி, உடல் ஆரோக்­கி­யத்­தில் முக்­கிய பங்கு வகிக்­கிறது. மெது­வான மற்­றும் ஆழ­மான சுவா­சம் நுரை­யீ­ரல் செயல்­பாட்டை மேம்­ப­டுத்­தும். சிந்­த­னை­

க­ளைப் பகுத்­த­றிந்து செயல்­ப­ட­வும் ஊக்­கு­விக்­கும்.

வயதானவர்கள் குழந்தை

களு­டன் சேர்ந்து விளை­யாடி மகிழ்ச்­சி­யாக பொழுதைக் கழிக்­க­லாம். குழந்தைப் பரு­வத்­தில் விளை­யா­டிய விளை­யாட்­டு­களை மீண்­டும் விளை­யாடி மகிழ்ச்­சியைப் பரி­மா­றிக்­கொள்­ள­லாம்.

சமை­ய­லில் உப்­பை­யும்

எண்­ணெய்­யை­யும் குறைத்­துக்­கொள்­வது செரி­மான அமைப்­புக்கு நல்­லது. பழங்­கள், காய்கறி­கள்

சாப்­பி­டு­வ­தும் செரி­மான செயல்­பாடு­க­ளுக்கு துணைபுரி­யும்.

தண்­ணீர், பழச்சாறு, மூலிகை தேநீர்­ போன்ற பானங்­களை குறிப்­பிட்ட இடை­வெ­ளி­யில் பரு­கு­வது நீர்ச்­சத்தைத் தக்­க­வைத்து, நோய் எதிர்ப்பு சக்­தியை வலுப்­ப­டுத்­தும்.

நோய் எதிர்ப்பு சக்தி தூக்­கத்­து­டன் நெருக்­க­மான தொடர்பு கொண்­டது. தூக்­க­மின்மை நோய்­

க­ளுக்கு முதல் கார­ண­மாக

அமைந்­து­வி­டும். இளை­ஞர்களு­டன் ஒப்­பி­டும்­போது வய­தா­ன­வர்­கள் தூக்க விஷ­யத்­தில் அசட்­டை­யாக இருக்­கக்கூடாது.

நோய் எதிர்ப்பு சக்­தியை வலுப்

­ப­டுத்­து­வ­தற்கு போது­மான அளவு ஓய்வு எடுத்­தாக வேண்­டும். தின­மும் இரவு குறைந்­தது 7 மணி­

நே­ரம் தூங்­கு­வதை உறு­திப்­ப­டுத்­திக்கொள்­ளுங்­கள்.

தொலை­பேசி, தொலைக்­காட்சி, கணினி ஆகி­யவை உட­லின் இயற்­கை­யான தூக்­க­வி­ழிப்பு சுழற்­சியை சீர்­கு­லைக்­கும் என்­ப­தால் தூங்­கச் செல்­வ­தற்கு ஒரு மணி நேரத்­திற்கு முன்­பாக அவற்றைத் தவிர்க்க வேண்­டும்.

சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட கார்­போ­ஹைட்­ரேட் கலந்த உண­வு­களும் சர்க்­க­ரை­யும் அதிக உடல் பரு­ம­னுக்கு வித்­தி­டும்.

வய­தான காலத்­தில் உடல்

பரு­மன் பிரச்­சி­னையை எதிர்­கொள்­வது இரு­தய நோய்­, நீரி­ழிவு போன்ற நீண்­ட­கால உடல்­ந­லப் பிரச்சினை­

க­ளுக்கு வித்திடும். ஆத­லால் உடல் எடையில் கவ­னம் வைக்­க­வேண்­டும்.

உடற்­ப­யிற்சி செய்

தாலோ, வேலை செய்­தாலோ, வெப்­ப­மான சூழ்நிலையில் இருந்தாலோ உட­லுக்கு அதிக திர­வங்­கள் தேவைப்­படும்.

வய­தா­ன­வர்­க­ளுக்கு பெரும்­பா­லும் தாகம் எடுப்­ப­தில்லை. தாகத்தை உண­ரா­விட்­டா­லும் போது­மான இடை­வெ­ளி­யில் தவ­றா­மல் திரவ உண­வு­களைப் பருக வேண்­டும்.

வய­தா­ன­வர்­கள் இன்­றைய கால­கட்­டத்­தில் நோய் எதிர்ப்பு சக்­தியை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு வாழ்க்கை முறை மற்­றும் உணவு பழக்­கங்­களில் போதிய மாற்­றங்­களைச் செய்ய வேண்­டும்.