செடி வளர்ப்­பு மன அழுத்­தத்தைக் குறைக்கும்

செடி வளர்ப்­பு மன அழுத்­தத்தைக் குறைக்கும்

2 mins read
2ac3445e-c6af-4a7f-8974-6d312f84f3cc
-

ஒரு நாளின் பெரும்­பா­லான நேரத்தை வீட்­டிற்­குள்­தான்

செல­வி­டு­கி­றோம். வீட்­டுச்­

சூ­ழல் உட­லுக்­கும் மன­துக்­கும் புத்­து­ணர்வு தரு­வ­தாக அமையவேண்­டும்.

1980களில் அமெரிக்காவின் 'நாசா' அமைப்பு நடத்­திய ஆய்­வில், வீட்டு தாவ­ரங்­க­ளின் வேர்­கள், மண் ஆகி­யவை காற்­றில் கலந்­

தி­ருக்­கும் கரிம சேர்­மங்­

க­ளின் செறி­வைக் கணி­ச­மாகக் குறைப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

வீட்­டுக்­குள் வளர்க்­கப்­படும் செடி­யா­னது இயற்­கை­யா­கவே வீட்­டிற்­குள் இருக்­கும் அசுத்த காற்றை தன்­னுள் கிர­கித்து சுத்­த­மான காற்றை வெளி­யி­டு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. அத­னால்­தான் பெரும்­பா­லானோர் வீட்­டிற்­குள்­ளும் பல வகை­யான செடி­கள் வளர்க்கின்றனர்.

மேலும் வீட்­டிற்­குள் பச்சை பசே­லென பசுமை நிறைந்த

செடி­களை வளர்ப்­ப­தால் நேர்­மறை அதிர்­வ­லை­களும் அதி­க­ரிக்­கும். பார்ப்­ப­தற்கே கண்­க­ளுக்கு குளிர்ச்­சி­யாக இருக்­கும் இந்தச் செடி வகை­களை வீட்­டிற்­குள் வளர்ப்­பது நன்­மையே தரும்.

உட்­பு­றச் செடி­கள் மன அழுத்­தத்தைக் குறைக்க உத­வு­

வ­தாக ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது. இது தொடர்­பான

ஆய்­வுக்கு வீட்­டில் செடி­களை வளர்ப்­ப­வர்­கள், வளர்க்­கா­த­வர்­கள் என இரு குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­க­ளின் ரத்த அழுத்­தம், இதய துடிப்பு, மன அழுத்தம் போன்­றவை பதிவு செய்­யப்­பட்­டன. வீட்­டில் செடி வளர்ப்­ப­வர்­கள் எந்­த­வொரு மன நெருக்­க­டிக்­கும் ஆளா­கா­மல் நிதா­ன­மாக இருப்­பது தெரி­ய­வந்­தது. ஆனால் செடி வளர்க்­கா­த­வர்­

க­ளி­டம் மேற்­கொண்ட பரி­சோ­த­னை­யில் இதய துடிப்பு, ரத்த அழுத்­தம் உயர்ந்­து­ இருப்பது ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

இருந்­தா­லும் ஒரு சில செடி­கள் நச்­சுத்­தன்மை வாய்ந்­தவை. அவை குழந்­தை­கள், செல்­லப் பிரா­ணி­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கக்­கூ­டும். செடி­கள் வாங்­கும்­போது இவற்றைக் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.