கொத்தமல்லி அழுகாமல் இருக்க...

கொத்தமல்லி அழுகாமல் இருக்க...

1 mins read
fd83e3b3-b066-4ee1-a73f-8abd26e2f83f
-

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி தழைகள் ஒருசில நாட்களிலேயே வாடி, அழுகிப் போய்விடும். ஒருசில எளிய வழி முறைகளை பின்பற்றினால் இரண்டு வாரம் வரை அவற்றை அழுகாமல் பாதுகாக்கலாம்.

செய்ய வேண்டியவை: கொத்தமல்லி கட்டின் வேர்ப்பகுதியை நறுக்கி விடவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதில் கொத்தமல்லி தழையைச் சிறிது நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

பின்பு நன்றாக கழுவிவிட்டு நிழலிலோ, மின் விசிறியிலோ உலரவைக்கவும். நீர்த்துளிகள் ஏதும் இல்லாமல் நன்கு உலர்ந்திருப்பதை உறுதி செய்த பிறகு மெல்லிழைத்தாளில் (டிஷ்யூ பேப்பர்) ஒற்றி எடுக்கவும்.

பின்பு கொத்தமல்லி தழையை முழுவதுமாக மெல்லிழைத்தாளில் சுற்றி காற்றுப்புகாத டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

சமையலுக்கு தேவைப்படும் போது கொத்தமல்லித் தழையை எடுத்து உபயோகிக்கலாம். சுமார் இரண்டு வாரங்கள் வரை கொத்தமல்லி தழை அழுகாமல் இருக்கும்.